ஆபிரஹாமின் அழைப்பு THE CALLING OF ABRAHAM 55-11-16 1. நன்றி, என் அன்பு சகோதரனே. அது அற்புதம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இங்கு நம்முடைய எழுப்புதலில் இந்த சகோதரர்கள் நமக்காக அற்புதமாக பாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் களிகூர்ந்த ஒவ்வொருவரும், “ஆமென்” என்று சொல்வீர்களா? (சபையார் ஆமென் என்று சொல்கிறார்கள்) நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. நான் இன்று அவர்களைப் பற்றி சில நல்ல பாராட்டுக்களை கேட்டேன். அதை கேட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஏனெனில் இந்த இரு சகோதரர்களையும் நான் அறிவேன். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதையும் அறிவேன். எல்லாவற் றிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். ஆகவே, இந்த புதன்கிழமை இரவு, சபைகளில் வாரத்தின் மத்தியில் வழக்கமாக நடைபெறும் ஜெபக் கூட்டத்தில் மீண்டும் இன்றிரவு இங்கிருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆராதனைகளை ஒதுக்கி, இங்கு வந்த உங்களை தேவன் நிறைவாக ஆசீர்வதிக்கும் படியும், இன்றிரவு இங்கு ஒரு ஜெபக்கூட்டத்தை நமக்கு தரும்படியும் நாங்கள் ஜெபிக்கிறோம். தங்களுக்கு சொந்த ஆராதனையை உடையவர்களாயிருந்து, அவர்களால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. தேவன் அவர்களுக்கும் ஒரு மகத்தான ஜெபக்கூட்டத்தை கொடுக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். 2. நேற்று இரவு, ஒன்பது முப்பதுக்கு கூட்டத்தை முடித்து நிச்சயமாக வெளியேறலாம் என்று நான் எண்ணினேன், ஆனால் அதை நான் மீண்டும் தவறவிட்டேன். ஆகவே நான்..ஆகவே என்னால் முடியுமானால் நான் மீண்டும் அதை முயற்சி செய்து பார்க்கப்போகிறேன். இப்பொழுது ஜெபிப்பதற்காக சில கைக்குட்டைகளை அவர்கள் இங்கே கொடுத்திருக்கிறார்கள். கைக்குட்டைகளில் ஒன்றை நான் கவனித்தேன். அவர்கள், “சகோதரர் பிரன்ஹாமே, தயவு செய்து அவற்றை அபிஷேகியுங்கள்,” என்றனர். இப்பொழுது அது நல்லது. அநேக சகோதரர்கள் கைக்குட்டைகளை அபிஷேகம் செய்வதை நான் அறிந்திருக்கிறேன். அது நல்லது. மேலும் நான்.......தேவன், தேவன் ஆசீர்வதிக்கிற எதற்காகவும் நான் நிச்சயமாக அதற்காக இருக்கிறேன், இல்லையா? அது... ஆனால் இப்பொழுது, நான் அவைகளை ஒருபோதும் அபிஷேகிப் பதில்லை. நான் அதற்காக வேதவசனத்தை உபயோகிக்கிறேன். இப்பொழுது வேதவசனத்தில் அவர்கள் கைக்குட்டைகளை அபிஷேகித்தார்கள் என்று நான் நம்பவில்லை, ஆனால் வேதம் அங்கே, "அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து கைக்குட்டைகளையும் உறுமால் களையும் எடுத்தார்கள்,” என்று கூறுகிறது. அதற்கான வேதவசனத்தை அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் நீங்கள் பெற்றுக் கொண்டிருக் கிறீர்கள். அவைகளை அபிஷேகிப்பதைப் பற்றி ஒன்றுமில்லை. ஆனால் நிச்சயமாக, அவர்கள் அவைகளை அபிஷேகித்தால், அது பரவாயில்லை, ஆனால் என்னிடம் எந்த அபிஷேக எண்ணெயும் இல்லை. 3. இப்பொழுது நான் எண்ணெய் பூசி வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் பண்ணுவதை நிச்சயமாகவே விசுவாசிக்கிறேன். அப்படித்தான் வேதம் கூறுகிறது. கைக்குட்டைகளை பொறுத்தவரையில், நான் ஜெபம் மட்டுமே செய்கிறேன். மேலும் இது ஒரு பெரிய வெற்றியாய் இருந்து வருகிறது. கைக்குட்டைகளுக்காக ஜெபிப்பதற்கு எங்களுக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. இவ்விதம் ஒரு அற்புதமான வழியில் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். இப்பொழுது, நான் கைக்குட்டைகளுக்காக ஜெபிப்பதைக் குறித்து ஒரு சிறிய சாட்சியைக்கூற விரும்புகிறேன். நான் அதை வெளியே அனுப்புகிறேன். (ஓ, நான் அந்த எண்ணிக்கையைக் கூற பயப்படுகிறேன்) இலட்சக்கணக்கில் உலகம் முழுவதிலும் நான் அதை அனுப்புகிறேன்.. சிறிது காலத்திற்கு முன்பு, ஒரு ஜெர்மன் மொழிபெயர்ப்பாளரிடமிருந்து எனக்கு ஒரு அழகான கடிதம் கிடைத்தது. எட்டு அல்லது பத்து வெவ்வேறு தேசங்களில் எனக்கு சிறிய தற்காலிக அலுவலகங்கள் உள்ளன. மேலும் அவர்கள் கடிதத்தைப் பெற்று, அதை மொழிபெயர்த்து பின்னர் அதை எனக்கு அனுப்பி அவர்கள் விரும்புவதை சொல்வார்கள். நான் அதற்கு திரும்பவும் பதில் அனுப்புகிறேன். அது மிகவும் அழகான காரியமாய் இருந்தது. அங்கே ஒரு ஜெர்மானிய பெண் சில வருடங்களாக மூட்டு வலியுடன் சக்கர நாற்காலியில் இருந்தாள். அவர்கள் என் புத்தகத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்திருந்தார்கள். அதை செய்த அந்த மனிதர் இங்கே கூட்டத்தில் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் அல்லது அன்றொருநாள் காலையில் கிறிஸ்தவ வியாபாரிகளின் காலை உணவு கூட்டத்தில் இருந்தார் என நான் நம்புகிறேன். நன்றி ஐயா. அன்றொரு நாள் காலையில் கிறிஸ்தவ வியாபாரிகளின் காலை உணவு கூட்டத்தில்... 4. ஆகவே, அவள் அந்த புத்தகத்தை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாள். அவள், தனக்கு ஒரு கைக்குட்டையை கேட்டு எனக்கு (ஒரு கடிதம்) அனுப்பினாள். நிச்சயமாக, ஒவ்வொரு கைக்குட்டை களுக்கும் பத்து பதினைந்து சென்டுகள் செலவாகிறது. ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கில் அனுப்புகிறோம். எனவே அவைகளை வாங்க எந்த மூலதனமும் இல்லாத காரணத்தால் என்னால் அவைகளை வாங்க இயலாது. அதனால் நான் பெரிய ரிப்பன் சுருள்களை வாங்குகிறேன். நான் இங்கு லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கும்போதே சிலவற்றை (ரிப்பன்) தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை எனக்கு நினைப்பூட்டுகிறது. எங்கள் ஊரில் நகரத்திலிருந்து தொலைவில் நாங்கள் வசிக்கிறோம். நூற்றுக்கணக்கான கஜம் ரிப்பன்களை வாங்கி, நான் அவைகளுக்காக ஜெபித்து, அவைகளை வெட்டி, ஜனங்களுக்கு அனுப்புகிறேன். நாங்கள் உலகம் முழுவதிலும் ஜெபக் குழுக்களை பெற்றிருக்கிறோம். ஜெபிப்பதற்கு ஜெபக்குழுவில் கலந்து கொள்ளும்படி, ஜனங்கள் சில நேரம் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கெல்லாம் எழும்புகிறார்கள். இந்த சிறிய ஜெர்மானிய பெண் கைக்குட்டையை பெற்று, பிறகு, நாங்கள் அனுப்பின அறிவுரைகளின் படி அவள் தன்னுடைய உள்ளாடையின் மேல் அல்லது அந்த சிறிய ஆடையின் மீது அதை அணிந்து கொண்டு, தன்னுடைய கரத்தை அவளுடைய இருதயத்தின் மேல் வைத்து, “இப்பொழுது பிசாசே, இங்கிருந்து வெளியேறு,” என்று கூறி சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து தன்னுடைய அன்றாட வேலைகளை தொடர்ந்து செய்தாள். அது எவ்வளவு அழகாய் உள்ளது. இந்த விதமாக அதை சொல்லும்பொழுது அது ஒரு எளிமையான விசுவாசமே என்று நம்மை நினைக்கச்செய்யும். 5. உங்களுக்குத் தெரியும், கிறிஸ்தவ நண்பர்களே, அதுதான். ஜனங்களை முட்டாளாக்குகிற அளவுக்கு அது மிகவும் எளிமையானது . அவ்வளவுதான். அது ஒன்றும் இல்லை. நீங்கள் ஏதோவொன்றை பற்றிப் பிடித்து கீழே இழுக்க வேண்டும். அது அவ்வளவு எளிமையானது. இப்பொழுது நான் இந்த கைக்குட்டைகளை இங்கே வைக்கிறேன். பிறகு நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுது அவைகளுக்காக ஜெபிப்பதில் எப்பொழுதுமே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு இரவும் நான் அதை செய்வேன். நன்றி. நீங்கள் இந்த கைக்குட்டையை அடையாளம் காண்பீர்கள், அப்படி செய்வீர்களா? சரிதான். மேலும் ஒவ்வொரு இரவும் நீங்கள் கைக்குட்டைகளுக்காக ஜெபிக்க விரும்பினால் அல்லது ஒன்றைப் பெற தவறினால் எனக்கு எழுதி ஜெபர்சன்வில் அலுவலகத்திற்கு அனுப்புங்கள். இப்பொழுது நான் இதை சொல்லியிருக்கக் கூடாது. அநேக நேரங்களில் ஜனங்கள் எனக்கு எழுதுங்கள் எனக்கு எழுதுங்கள், என்கிறார்கள். அது பரவாயில்லை சகோதரியே (சகோ. பிரன்ஹாம் யாரிடமோ பேசுகிறார்). அவர்கள் அதை துவங்க உங்களுடைய முகவரியை பெற முயற்சிக்கிறார்கள். ஆனால் எந்த வானொலி நிகழ்ச்சியும் என்னிடம் இல்லை. அதை ஆதரிக்க எதுவுமில்லை. நான் உங்கள் கடிதத்திற்கு பதிலளித்து கைக்குட்டையை திரும்ப அனுப்புகிறேன், அவ்வளவுதான். ஆனால் இப்பொழுது ஒன்று உங்களுக்கு வேண்டுமானால், கடிதம் அனுப்பி பெற்றுக்கொண்டு, இப்பொழுது அது உங்களுக்கு உபயோகமில்லை யானால் அதை உங்கள் வேதாகமத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய கர்த்தர், வெறுமனே.... 6. சகோ. ஓரல் ராபர்ட்ஸ் அவர்களை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் ஓரல் ராபர்ட்ஸின் பிரசங்கத்தைக் கேட்டிருப்பீர்கள். அவர் ஒரு மிக அன்பான சகோதரன் மற்றும் அருமையான நபர். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்ற என்னுடைய பொருளைப் போல அவருடைய முக்கிய பொருளும் அதுவாகவே இருக்கிறது. உங்களை ஏதாவதொன்றை தொடவைப்பது அவருடைய முறையாக இருக்கிறது. ஒரு சிறிய துணியையோ, அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்றை தொடுவதோ என்று நான் நினைக்கிறேன். அதாவது உங்கள் விசுவாசத்தை சற்று தூண்டுவதற்கு ஏதாவதொன்றை தொடவைப்பது. எனவே இப்பொழுது ஒரு கணம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். இப்பொழுது எங்கள் பரலோகப் பிதாவே, தகுதியில்லாத எங்களை ஆசிர்வதித்ததற்காகவும், எங்களுக்காக நீர் செய்த எல்லாவற்றிற் காகவும் முதலாவது நன்றி செலுத்தும் படி நாங்கள் வந்திருக்கிறோம். ஆம், பிதாவே நாங்கள் ஒன்றுக்கும் தகுதியற்றவர்கள். ஆனால் உம்முடைய கிருபையின் நீதியின் மூலம் நீர் எங்களை ஆசீர்வதிக்கிறீர். ஆகவே நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். வார்த்தையை சுற்றி நாங்கள் அதிகமாய் ஐக்கியங் கொள்ளும்படி, வார்த்தையில் நீர் எங்களை இன்றிரவிலே சந்திக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த ஆராதனையில் வியாதியஸ்தர் களுக்காக ஜெபிக்கையில் இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் ஏதாவது ஒரு வழியில் அநேகருடைய விசுவாசத்தை ஊக்குவித்து அபரிவிதமாக அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. நீர் எங்களுக்கு செய்திருக்கின்ற எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். சில இரவுகளுக்கு முன்பு மூன்று அல்லது நான்கு கட்டில்களும், சக்கர நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. இன்றிரவு இக்கட்டிடத்தை பார்க்கும்போது ஒன்றே ஒன்றுதான் விடப்பட்டிருக்கிறது. பிதாவே, அங்கிருக்கிற அந்த நபரும் இன்றிரவு குணமடைவாராக. நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் விடுவித்தீர். இப்பொழுது இன்றிரவு இந்த பெண்ணை விடுவியும், அவளுக்கும் நீர் அதை அருளிச்செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இப்பொழுது உங்கள் அன்பான பிள்ளைகளில் அநேகர் வியாதிப்பட்டுள்ளனர், மற்றும் வியாதியுற்ற அன்பானவர்களை நாடு முழுவதும் கொண்டுள்ளனர். கைக்குட்டைகளை ஆசிர்வதிக்கும்படி அவர்கள் என்னிடம் கொண்டு வந்துள்ளனர். பிதாவே, இந்தக் காரியங்களை கைகூடிவரச் செய்கிற தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காகவும், அப்பிரயோஜனமான உம்முடைய ஊழியக்காரனில் ஜனங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்காகவும் முதலில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 7. இப்பொழுது, அவர்கள் பரிசுத்த பவுலின் சரீரத்திலிருந்து கச்சைகளையும், உருமாள்களையும் எடுத்தார்கள் என்று வேதாகமத்தில் நாங்கள் போதிக்கப்பட்டிருக்கிறோம். இப்பொழுது, பிதாவே நாங்கள் பரிசுத்த பவுல் அல்ல என்பதை நாங்கள் உணருகிறோம். ஆனாலும் ஜனங்களின் நிலைமைகளை சந்திக்க நீர் இன்னும் அதே கர்த்தராகிய இயேசுவாயிருக்கிறீர். ஒருமுறை இஸ்ரவேலர்கள் செங்கடல், மலைகள், மற்றும் பாலைவனங்கள் சூழ சுற்றி வளைக்கப்பட்டனர். பார்வோனுடைய ராணுவம் அவர்களை நெருக்கிக் கொண்டிருந்தது. அங்கே அவர்களுடைய பாதையில் செங்கடல் இருந்தது. தேவன் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து கோபமான கண்கள் மூலமாக நோக்கிப் பார்த்தார் என்று யாரோ ஒரு எழுத்தாளர் கூறினார், செங்கடல் பயந்து, பிளந்தது. அதினூடாக ஒரு பாதைசென்றது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு, இஸ்ரவேலர்கள் வறண்ட நிலத்தில் கடந்து செல்வது போல கடந்து சென்றார்கள், ஏனென்றால் தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருந்தார். பிதாவே, இக்கைக்குட்டைகளை பாதிக்கப்பட்டவர்கள் மீதும், வியாதிப்பட்டவர்களுடைய சரீரங்களின் மீதும் வைக்கும் போது, இந்த கைக்குட்டைகள் பிரதிநிதித்துவப் படுத்துகிற கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினூடாக தேவன்தாமே மறுபடியும் அதே விதமாக கோபக் கண்களால் இந்த ஜனங்களை கட்டி வைத்திருக்கிற வியாதியை நோக்கிப்பார்ப்பாராக. சாத்தான் அதற்கு பயந்து விலகிப்போவானாக. மேலும் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தேவனுடைய அருமையான ஆரோக்கியத்தின் வாக்குத்தத்தத்தை நோக்கிச் செல்லட்டும். பிதாவே இதை அருளும். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இக்கைக்குட்டைகளை அனுப்புகிறோம். ஆமென். இப்பொழுது கூட்டம் முடிந்த உடனே... இவற்றை நீங்கள் பெறலாம். 8. இப்பொழுது என்னால் முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சி செய்யப் போகிறேன். இன்றிரவு பழைய ஏற்பாட்டிலிருந்து இந்த பாடத்தின் பேரில் தொடர்ச்சியாக பேசலாம் என்று நான் நினைக்கிறேன். கடந்த வாரத்தில் புதிய ஏற்பாட்டின் பேரில் எட்டு இரவுகளாக நாம் பேசினோம். இன்றிரவு நாம் பழைய ஏற்பாட்டிற்கு திரும்பி சிறிது பேசலாம் என்று நினைத்தேன். நான் பழைய ஏற்பாட்டை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? நான் ஒரு வகையான ஒப்பிட்டு பார்க்கிறவன். பழைய ஏற்பாடு சற்று நிறைய தங்க கட்டிகள் புதைந்துள்ளதாயிருக்கிறது. நான் சற்று அந்த தங்க கட்டிகளை தேடிக் கண்டுபிடித்து தோண்டி எடுத்து பிறகு அவைகளை சுத்தம் செய்து மெருகேற்ற விரும்புகிறேன். (நீங்கள் அப்படி விரும்பவில்லையா?) உங்களுக்கு தெரியுமா? அவைகள் ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறதை நீங்கள் காணலாம். பழைய ஏற்பாடு முழுவதும் புதிய ஏற்பாட்டின் நிழலாயிருந்தது. அன்று நியாயப்பிரமாணத்தின் மூலமாக இஸ்ரவேலுக்கு தேவன் எப்படி இருந்தாரோ இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக நமக்கும் அப்படியே இருக்கிறார். என்ன ஒரு அழகான, அழகான காட்சி. நான் என்னுடைய கூடாரத்தில் மேய்ப்பராய் இருந்த பொழுது, யோபின் புத்தகத்தை எடுத்து ஒரு வருடமும் ஆறு மாதமும் அதின் பேரில் நிலைத்திருந்ததை ஞாபகங் கொள்ளுகிறேன். ஒரு வருடமும் ஆறு மாதமும். யோபு சாம்பல் குவியலின் மேல் உட்கார்ந்திருந்ததில் ஐந்து வாரங்கள் பிரசங்கத்திருந்தது எனக்கு தெரியும். அவ்வளவு காலம் என்னை பொறுத்துக் கொள்வதற்கு சபையார் அருமையான ஜனங்களாயிருந்தனர். ஆனால் ஒரு சீமாட்டி பொறுமையை இழந்து, அவள், “சகோதரன் பிரன்ஹாமே, எப்பொழுது யோபுவை சாம்பல் குவியலிலிருந்து வெளியே கொண்டு வருவீர்?” என்று எனக்கு ஒரு கடிதத்தை எழுதினாள். மேலும் அவள், “நாங்கள் அதில் களி கூறுகிறோம், ஆனால் அவனை நீண்ட நேரம் அதில் உட்கார வைத்து விட்டீர்கள்,” என்றாள். ஆனால் அது சரிதான், அது உச்சகட்ட மாயிருந்தது. எனக்கு அந்த முழு புத்தகமும் உச்சகட்டமாயிருக்கிறது. எலிகு அவனிடம் பேசிக்கொண்டிருந்தான். அப்பொழுது தேவனுடைய ஆவி அவன் மேல் வந்தது. இடிகள் முழங்கியது, மின்னல்கள் மின்னியது. யோபு எழுந்து நின்று, “என் மீட்பர் உயிரோடு இருக்கிறாரென்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தாலும் என் மாம்சத்திலிருந்து நான் தேவனைப் பார்ப்பேன்," என்றான். என்னே ஒரு அழகான காரியம். அதினுடைய உச்சகட்டம் (Climax) என்னவென்றால், அங்கே சபையில் ஒருவரும் பாவியாக விடப்பட்டிருக்கவில்லை, அவர்கள் ஒவ்வொருவரையும் கர்த்தராகிய இயேசு இரட்சித்திருந்தார். 9. இப்பொழுது இன்றிரவு ஆதியாகம புத்தகத்தில் நாம் துவங்கப் போகிறோம். மேலும் இந்த புத்தகத்தையும் நான் நேசிக்கிறேன். நான் தீர்க்கதரிசியாகிய ஆபிரஹாமிடத்தில் தொடங்கி சிறிது பேச விரும்புகிறேன். இப்பொழுது நாம் ஆதியாகமம் 12 ம் அதிகாரத்தில் வார்த்தையின் ஒரு பகுதியை வாசிப்போம், பிறகு கர்த்தருக்கு சித்தமானால், ஆபிரஹாமின் பேரில் இரண்டு இரவுகள் நாம் பேசப்போகிறோம். நான் பேசுகிற நேரத்தை கவனித்துக்கொண்டிருந்து அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். பிறகு அவனுடைய சொந்த குமாரனை பலியிட சென்ற இடத்திற்கு அல்லது அவன் பலி செலுத்தின அந்த உச்சத்திற்கு அவனை கொண்டு வருவேன். அவர் யெகோவாயீரே என்று அழைக்கப்பட்டார் “கர்த்தர் தனக்கான பலியை பார்த்துக்கொள்வார்” 10. இன்றிரவு ஆதியாகமம் 12-ம் அதிகாரத்தில் ஆபிரஹாமின் அழைப்பைக் குறித்து பேச விரும்புகிறேன். முதல் மூன்று வசனங்களை வாசிக்கிறேன். 1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். வாசிக்கப்பட்ட வசனத்தோடு கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. 11. இப்பொழுது சீக்கிரமாக, ஒவ்வொரு இரவும் குறைவான ஜனக் கூட்டம் மாத்திரமே இருப்பதால் நாம் நேராக சுகமளிக்கும் ஆராதனைக்குள்ளாக கடந்து செல்வோம். ஒரு சில இரவுகளுக்கு முன்பு அவர்கள் கட்டில்களுடனும் சக்கர நாற்காலிகளுடனும் உள்ளே வந்தனர் அவைகள் படிப்படியாக குறைந்து இப்பொழுது ஒன்றுக்கு வந்திருக்கின்றது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! நான் இன்றிரவு தேவனுக்கு நன்றி செலுத்தி துதிக்கிறேன். அங்கே எனக்கு துணையாய் இருக்கிற என்னுடைய அந்தப் பையன்கள் லியோவும், ஜீனும் ஒலிநாடாக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள், சிறிது நேரம் கழித்து நான் அந்த ஒலிநாடாக்களை பெற்றுக் கொள்வேன். ஒலிநாடாக்களை பதிவு செய்கிற மற்றொரு குழுவும் இங்கே இருப்பதை நான் பார்க்கிறேன். உங்களுக்கு என்ன சொல்லப்பட்டது என்று நீங்கள் அறிய விரும்பினால், அது சுயநினைவுக்கு அப்பாற்பட்டு பேசப்படுகிறது. அந்த நிலையில் இருக்கும் பொழுது நீங்கள் என்ன பேசுகிறீர்கள் அல்லது நான் என்ன பேசுகிறேன் என உணருவதில்லை. நீங்கள் கவனித்தீர்களா? ஆகவே ஒலிநாடாக்களை பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது நான் என்ன உங்களுக்கு சொன்னேன் என்று நீங்கள் கண்டு கொள்வீர்கள். எப்பொழுதுமே ஞாபகம் கொள்ளுங்கள், ஒலிநாடா என்ன சொல்லுகிறதோ அதை அப்படியே பின்பற்றுங்கள். பயப்படாதிருங்கள். 12. என் இருதயத்தில் மற்றொரு சிறிய சாட்சி இருக்கிறது. நான் அதை சொல்லியாக வேண்டும். ஒரு இரவு அவர்கள் ஜெப வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள், அங்கே ஒரு சிறிய சீமாட்டி வயிற்று தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். பரிசுத்த ஆவியானவர் அவளைப்பற்றின எல்லாவற்றையும், அவள் யாரென்றும், அவளுக்கு தெரிவித்தார். ஜனங்கள் யாராயிருந்தார்கள் என்று சொல்வதைப் பற்றி யாரோ ஒருவர் கேள்வி கேட்டார்கள், “அது வேத வசனமாயிருக்கவில்லை” என்றார்கள். ஓ, ஆம், அது வேதவசனந்தான், ஆம் அது வேதவசனந்தான். பேதுரு இயேசுவிடம் வந்த பொழுது, “நீ யோனாவின் குமாரனாயிருக்கிறாய், ஆனால் இனிமேல் நீ பேதுரு என்று அழைக்கப்படுவாய்” என்று கூறினார். பேதுரு என்றால் ஒரு சிறிய கல். இயேசு அவனை அறிந்திருந்தார். அவனுடைய பெயரை அறிந்திருந்தார். அவனுடைய பெயர் என்னவென்று அவனுக்கு சொன்னார். என்னவாயிருந்தாலும் இந்த சிறிய பெண், பிறகு, “கர்த்தர் உரைக்கிறார், நீ குணமடைந்தாய்” என எல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டு, சொல்லப்பட்டது. ஏனென்றால் வெளிச்சம் வந்தபடியால் அந்தப் பெண் சுகமடைவதை கண்டேன். இல்லையென்றால் நான் அதை கூறியிருக்கவே மாட்டேன். அப்படியானால் பேசுவது நான் அல்ல, அது தேவனாயிருக்கிறது. ஆகவே அவள் வீட்டிற்கு சென்றாள், அவள், "நல்லது நான் நன்றாக இருந்தால் வீட்டிற்கு போய் சாப்பிடுவேன்,” என்றாள். அவளுடைய பக்கத்து வீட்டில் இருக்கிற சிநேகிதிகளில் ஒருத்தியின் கழுத்தில் ஒரு பெரிய கட்டி இருந்தது. அதே காரியத்தை பரிசுத்த ஆவியானவர் அவளிடம் பேசி, "அவள் சுகமடைந்தாள்” என்று கூறினார். ஆகவே அவள் கட்டி இருப்பதாகவே உணர்ந்தபடியே வீட்டிற்கு சென்றாள். அவள், “நல்லது, அது இன்னும் அங்கே இருக்கிறது. ஆனாலும் எனக்கு சொல்லப்பட்டது. அது கர்த்தர் பேசினதுண்டானால், அந்த கட்டி மறைந்தே ஆக வேண்டும்," என்றாள். அது ஒன்றும் இல்லாதது போல நடந்து கொண்டு தொடர்ந்து செல்ல அவர்கள் ஒப்புக்கொண்டபடியால், அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். அதனால் அவர்கள் சுகம் அடைந்தார்கள். 13. ஆகவே அந்த சிறிய பெண் சாப்பிட முயற்சித்தாள். ஓ! என்னே, உண்மையில் அவள் வியாதிப் பட்டாள், பிறகு சில நாட்களில் அது மிகவும் மோசமாகிக் கொண்டே இருந்தது. அவள் தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தார் எல்லாரிடமும். “கர்த்தருக்கு நன்றி. நான் சுகமாகி விட்டேன்,” என்று கூறிக்கொண்டு இருந்தாள். அதனுடன் அவள் தரித்திருந்தாள். சுமார் ஆறு வாரங்கள் கடந்துவிட்டன, வித்தியாசமே இல்லை, இன்னும் அப்படியே இருந்தது. நல்லது, அவளுடைய அக்கம் பக்கத்தினர் சிலர், “இப்பொழுது சகோதரியே, நீ இதற்கு நிந்தையை கொண்டு வருகிறாய். அது உண்மையாக இராவிட்டால் நீ அவ்விதம் கூறக்கூடாது,” என்றார்கள். அவள், “ஆனால் இது நான் புரிந்து கொள்ள முடியாத அறியாத ஒரு வழியாயிருக்கிறது, நான் நன்றாக இல்லாததை போல காணப்படுகிறது. ஆனாலும் என் இருதயத்தில் ஏதோவொன்று உள்ளது. ஆவியானவர் அங்கே நின்று கொண்டு நான் யாரென்றும், என் வாழ்க்கையை குறித்தும், எது இதை உண்டாக்கினதென்றும் என்ன நடந்தது என்றும், பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சுகமடைந்தேன், என்றும் என்னிடம் கூறியது. நான் அந்த சுகத்தை என்னால் உணர முடியவில்லை. ஆனாலும் அதை நான் விசுவாசிக்கிறேன் ” என்றாள். ஆகவே அவள் தொடர்ந்து அதைப்பற்றிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் காலையில், அவளுடைய பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தார்கள். அவள் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு பசி உண்டாயிருந்தது. ஒரு வினோதமான உணர்வு அவளுக்கு வந்தது. அவள் பசியடைந்தாள். நான் அறிந்தவரையில் அந்தப் பெண் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கலாம். அவள் சென்று ஒரு சிறிய ரொட்டித் துண்டை சாப்பிட முயற்சித்தாள். அது நன்றாக இருந்தது. வெண்ணெய் தடவி பொறித்த ரொட்டி துண்டு அவளை அதிக வியாதியுற செய்யும் என்று நினைத்தாள். வயிற்றுப்புண் (Ulcered Stomach). மேலும் அவள், “மிகவும் நன்றாயிருந்தது,” என்றாள். அவளுக்கு இன்னும் பசியாகவே இருந்தது. ஆகவே, அவளுடைய பிள்ளைகள் சாப்பிடாமல் மீதம் வைத்திருந்த ஓட்ஸை (oats) சாப்பிட வேண்டும் என்று அவள் நினைத்தாள். அவளுடைய பிள்ளைகள் சாப்பிடாமல் மீதம் வைத்திருந்த ஓட்ஸ் இருந்தது. ஆகவே அவள் அங்கே உட்கார்ந்து பிள்ளைகளின் ஓட்ஸை சாப்பிட்டு முடித்தாள். நல்லது அவள் நன்றாக உணர்ந்தாள். அவள் அங்கே ஒரு மகத்தான விருந்தைக் (gastronomical jubilee) கொண்டிருந்தாள். அவள் இரண்டு முட்டைகளை வறுத்து சாப்பிட்டு, ஒரு கப் காபி குடித்தாள். அவள், “ஒன்றும் நடக்கவில்லையே,” என்றாள். மிகவும் நன்றாக உணர்ந்தாள். வழக்கமாக அவள் உடல் நிலை சரியில்லாமல் தலைவலி மற்றும் வாந்தி எடுக்க துவங்குவாள். ஒன்றும் நடக்கவில்லை. 14. அவளால் முடிந்தவரை சுமார் முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் காத்திருந்தாள். அவளால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. வீதியில் பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லும்படி அவள் சென்றாள். ஓ, என்னே! அவள் வீட்டுக்குள் ஓடினாள். அந்தப் பக்கத்து வீட்டுக்காரி உரக்க கத்திக் கொண்டிருந்தாள். அவள், “நேற்று அந்த கட்டி அங்கே இருந்தது. ஆனால் சிறிது நேரத்திற்கு முன்பு நான் கழுவ தொடங்கினேன், ஒரு வினோதமான உணர்வை நான் பெற்றேன், அந்தக் கட்டியானது போய்விட்டது, அது என்னிடத்திலிருந்து போய்விட்டது,”என்றாள். ஒரு வாரம் கழித்து அந்த சிறிய பெண்கள் ஒன்று சேர்ந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து பரிசுத்த ஆவியானவர் என்ன சொன்னாரோ அதைப் பற்றிக் கொண்டதையும் அது உண்மையாயிருந்தது என்றும் மற்றவர்களுக்கு சாட்சி கூறினார்கள். இப்பொழுது, என்ன நடந்தது? அவ்வளவுதான். இப்பொழுது நண்பர்களே குழப்பிக் கொள்ளாதீர்கள். தேவன் ஏதோ ஒன்றை கூறும்பொழுது அது நடந்தாக வேண்டும். தேவன் அதை பேசும் பொழுது...... நிச்சயமாக, நாம் அவருடைய வேதத்தைதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். “உன்னால் விசுவாசிக்க கூடுமானால் எல்லாம் கைகூடும்,” என்று அவருடைய வேதம் கூறுகிறது. 15. இப்பொழுது தேவன் அவருடைய ஊழியக்காரர் மூலமாக என்ன பேசுகிறாரோ அது இரண்டாம் தரமாக இருக்கும். ஆனாலும் அது தேவனுடைய வார்த்தையாயிருந்தால் அது நடந்தே தீரும். மேலும் நான் சிறு வயதில் இருந்தே தரிசனங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இன்றிரவு தேவனுக்கு முன்பாக நான் நிற்கிறேன் அவரே என் நியாயாதிபதியாயிருக்கிறார். ஒருமுறை கூடதரிசனங்கள் தவறினதை நான் பார்த்ததில்லை. ஒரு முறை கூட தவறினதில்லை. அது தேவனாயிருக்கிற காரணத்தால் அது எப்போதும் பரிபூரணமாயிருக்கிறது. இப்பொழுது என்ன நடந்தது? தேவன் விரைவாக செயல்பட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். பாருங்கள்? இல்லை, இல்லை. ஒருமுறை தானியேல், தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தான். அவனை பின் தொடருகிற ஒரு தூதன் இருந்தான். தானியேலை பின் தொடரும்படி அவன் அனுப்பப்பட்டிருந்தான். உங்களுக்கு அந்த கதை நினைவிருக்கிறதா? அவன் ஜெபித்துக் கொண்டிருந்தான்.தூதன் அவனிடத்தில் வருவதற்கு இருபத்தொரு நாட்கள் ஆனது அல்லது அதைப்போன்ற ஏதோவொன்று என்று நான் விசுவாசிக்கிறேன். உங்களுக்கு அந்த கதை நினைவிருக்கிறதா? 16. இப்பொழுது கர்த்தருடைய தூதன் அந்த ஆசிர்வாதத்தை சொன்ன பொழுது அது என்னவாயிருந்தது? பக்கத்து வீட்டு வழியாக கர்த்தருடைய தூதன் கடந்து சென்று, அங்கு ஆசீர்வாதத்தை கூறி, கிரியை செய்தார். அதுதான் அங்கிருக்க வேண்டியதாக இருந்தது. அவர் ஏற்கனவே என்ன செய்திருந்தாரோ அதையே இங்கேயும் செய்தார். ஆகவே எப்பொழுதுமே, தேவன் எதையாவது சொல்லும் பொழுது அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 17. இப்பொழுது, நாம் சில கணங்கள் ஆபிரஹாமைப் பற்றி பேச போகிறோம் என்பதற்கான ஒரு நல்ல பின்னணி, அது ஒரு நல்ல பின்னணியாக இருக்கிறது. இப்பொழுது தேவன் ஆதியிலே ஏதேன் தோட்டத்தில் அவருக்கும் ஆதாமுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை செய்தார். ஆதாம் தன்னுடைய உடன்படிக்கையை முறித்துப் போட்டான். மனிதன் எப்பொழுதும் தேவனுடனான தனது உடன்படிக்கையை முறித்து போடுகிறான், ஆனால் தேவன் மனிதனுடன் அவருடைய உடன்படிக்கையை ஒருபோதும் முறித்துப் போடுவதில்லை. என்ன நடக்கப் போகிறது என்று தேவன் கண்டார். ஆகவே அவர் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தினார். பிறகு உலகம் துன்மார்க்கத்தால் நிறைந்து பலுகிப்பெருக ஆரம்பித்தது அவர்கள் பாபிலோனுக்கு சென்றார்கள், சொல்லப்பட்ட முதல் விக்கிரக ஆராதனை பாபிலோனில் தான் தொடங்கியது. தேவன் தம்முடைய சுயாதியபத்திய தெரிந்து கொள்ளுதலின் மூலம் நேர்மையான இருதயத்தையுடைய ஒருவரை, அவர் ஆசீர்வதிக்க கூடிய ஒருவரை, தேசம் முழுவதும், தேசத்தில் உள்ள எல்லா ஜனங்களிலும் தேடி ஆபிரஹாமை தெரிந்து கொண்டார். எத்தனை கிறிஸ்தவர்கள் இன்றிரவு இங்கே இருக்கிறீர்கள்? உங்கள் கரத்தை காணலாமா? அது நூறு சதவீதம் என்று நான் நம்புகிறேன். அது அருமையாயிருக்கிறது. நூறு சதவீத கிறிஸ்தவர்கள். நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பாவிகளுக்கு முன்பு அதை சொல்வது அவ்வளவு சுலபமல்ல. நீங்கள் ஏன் கிறிஸ்தவர்களாகயிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் தேவன் உங்களை அழைத்தார். நீங்கள் எந்த நேரத்திலும் தேவனைத் தேடவில்லை. இல்லை ஐயா, அது தேவன் உங்களைத் தேடுவதாயிருக்கிறது எந்த மனிதனும் எந்த காலத்திலும் தேவனை தேடியதில்லை. தேவனே மனிதனை தேடினார். “பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வர மாட்டான்,” என்று இயேசு சொன்னார். விழுந்து போன பாவி தேவனைத் தேடி கண்டுபிடிப்பதற்கு பதிலாக, தேவனே விழுந்து போன பாவியை தேடி வந்தார். ஏதேன் தோட்டத்தில் இருந்தே காரியம் இவ்விதமாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. 18. ஆவிக்குரியவிதத்தில் பேசுகிறேன். தேவனுடைய தெரிந்து கொள்ளுதலினாலே உலகம் தோன்றும் முன்பிருந்தே நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். தேவன், அவருடைய ஆவியாகிய தன்னுடைய சொந்த சாயலில் மனிதனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கின பொழுதே, நீங்கள் எப்பொழுது காட்சியில் வருவீர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். இப்பொழுது நீங்கள் கவனித்தால்... தெரிந்து கொள்ளுதலின் மூலம்... இதனுடைய பின்னனியை பெற நாம் அதிக நேரத்தை எடுக்க வேண்டும், ஆனால் அதற்கு நேரமில்லை. இதைக் குறித்து நாம் எப்படி பின்னனியைக் கொடுப்பது? எவ்வாறு அந்த கோத்திரப்பிதாக்கள்..... உதாரணத்திற்கு ஆபிரஹாம்.. ஆபிரஹாமே தெரிந்த கொள்ளுதலாய் இருக்கிறான். என்ன ஆனாலும் இதை மறந்து போக வேண்டாம். ஆபிரஹாம் தேவனுடைய தெரிந்து கொள்ளுதாய் இருக்கிறான். ஈசாக்கு, நீதிமானாக்கப்படுதல்; யாக்கோபு, கிருபை; (நான் கிருபையில் விசுவாசம் கொண்டிருக்கிறேன் என்று யாவரும் அறிவீர்கள், யாக்கோபுக்கு தேவன் என்ன செய்தார் என்று பாருங்கள்) ; யோசேப்பு, பரிபூரணம். பிறகு அது முடிகிறது. தேவன் ஆபிரஹாமில் அவருடைய தெரிந்து கொள்ளுதலையும், ஈசாக்கில் அவருடைய நீதிமானாக்கப் படுதலையும், யாக்கோபில் அவருடைய கிருபையையும் யோசேப்பில் அவருடைய பரிபூரணத்தையும் காண்பிக்கிறார். 19. ஆகவே, தேவன் ஆபிரஹாமை அழைத்தார், அவன் மற்றவர்களை விட சிறந்தவன் என்பதால் அல்ல, ஆனால் தேவன் ஆபிரஹாமை தெரிந்து கொண்டதால், ஆபிரஹாமை அழைத்தார். மேலும் அவர் அவனை அழைத்து நிபந்தனையற்ற தனது உடன்படிக்கையை கொடுத்து அவனை இரட்சிப்பதாக அவனிடம் கூறினார். மேலும் அவன் சேர வேண்டிய இடம் என்னவாயிருக்குமென்றும், அவனுடைய முதிர் வயதில் அவனிடத்தில் அவர் வருவார் என்றும் அவர் கூறினார். தேவன் மனிதனை இரட்சிக்க முன்கூட்டியே தீர்மானித்திருந்தார். மனிதன் அங்கே ஒன்றும் செய்ய முடியாதவனாயிருக்கிறான். அவன் துவக்கத்திலிருந்தே தோற்றுப்போனவனாய் இருக்கிறான். எனவே தேவன் ஆபிரஹாமை தெரிந்து கொள்ளுதலின் மூலம் அழைத்து இரட்சித்தார். நீங்கள், "ஓ, சகோதரனே நான் மட்டும் ஆபிரஹாமாயிருந்தால், ”என்று கூறுகிறீர்கள். இப்பொழுது சற்று பொறுங்கள். ஆபிரஹாமை மட்டுமல்ல அவனுக்கு பிறகு அவனுடைய வித்தையும் தெரிந்துகொண்டு அழைக்கிறார். ஆமென். இப்பொழுது என்னுடைய சகோதர்களே, இது சற்று ஒத்துப்போகமாலிருக்கலாம், ஆனால் சில நிமிடங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். அவன் ஏதாவதொன்றை செய்தான் என்பதினால் அல்ல, தேவன் ஆபிரஹாமை தனது சுயாதிபத்திய தெரிந்து கொள்ளுதலின் மூலம் அழைத்தார். அவன் தனது தாய், தந்தை, மற்றும் மனைவி சாராளுடன் பாபேல் கோபுரத்திலிருந்து வந்திருந்தான். அவன் சினேயார் தேசத்தில் வசித்தான், எனக்கு தெரிந்தவரை அவன் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான், அவன் ஆகாரத்திற்காக காலையில் வெளியே சென்று பெர்ரி பழங்களையும், புதருக்குள் சென்று அவனுடைய புரதச்சத்துக்காக (protein) ஒரு விலங்கை கொன்று சாப்பிடுவான். அதன் பிறகு கருப்பு பெர்ரி பழங்களும் மற்றவைகளையும் சாப்பிடுவான். அவன் கல்தேயர் தேசத்தில் ஊர் என்னும் பட்டணத்தில் சினேயாரில் வாழ்ந்தான். தேவன் அவருடைய தெரிந்து கொள்ளுதலின் மூலம் ஆபிரஹாமை அழைத்தார். அவர், “நீ சில காரியத்தை செய்வாய் என்றல்ல, ஆனால் நான் அதை ஏற்கனவே செய்து முடித்து விட்டேன்,” என்றார். மனிதனுடைய சுபாவத்தையும், அவனுடைய சொந்த சித்தத்தையும் மீறி தேவன் மனிதனை இரட்சிக்க தீர்மானித்திருந்தார். மனிதன் அவனுடைய சுபாவத்தில் முற்றிலும் தேவனுடைய சித்தத்திற்கு எதிராகவே இருக்கிறான். அவன் ஒரு பாவி, பாவியாகவே பிறந்திருக்கிறான், பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டு, பொய்களை பேசுகிறவனாக இந்த உலகத்தில் வந்திருக்கிறான். பிறப்பிலிருந்தே இழக்கப்பட்டவனாயிருக்கிறான். அதைக் குறித்து அவன் செய்யக்கூடிய காரியம் ஒன்றுமில்லை. 20. நீங்கள் வெளியே சென்று ஒரு பன்றியிடம், "திரு. பன்றி அவர்களே நீங்கள் தவறாகயிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்,” என்று சொல்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஏன், நீங்கள் விரும்பினால், அதனை குளிப்பாட்டி அதற்கு ஒரு நல்ல விலையுயர்ந்த மேலங்கியை உடுத்த முடியும், அது எந்த நன்மையும், செய்யாது. அது மீண்டும் சேற்றில் புரளவே திரும்ப செல்லும். அது அதனுடைய சுபாவமாயிருக்கிறது. துவக்கத்திலிருந்தே அது ஒரு பன்றி. ஒவ்வொரு மனிதனும், மறுபடியும் பிறக்காத ஒவ்வொரு மனிதனும், நல்லவனாக இருக்க எவ்வளவு முயற்சித்தாலும், நீங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டாலும், தேவன் உங்களுடைய சுபாவத்தை மாற்றாதவரை நீங்கள் சுபாவத்தின் மூலம் பாவியாயிருக்கிறீர்கள். இப்பொழுது அது சரி. நாம் அதை சொல்ல விரும்பவில்லை. நீங்கள், “நான் வசிக்கும் இடத்திலே நான்தான் சிறந்த உடையை உடுத்துகிறேன். என்னிடத்தில்தான் சிறந்த கார் இருக்கிறது. நான் சிறந்ததை பெற்றிருக்கிறேன்,” என்று கூறலாம். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுபாவம் மாற்றப்பட.... "நான் பொய் சொன்னதேயில்லை. நான்..." இன்னமும் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அது உன்னுடைய சொந்த தகுதியினால் அல்ல, ஆனால் அது தேவனுடைய அழைப்பும் நிபந்தனையற்ற தெரிந்து கொள்ளுதலுமாயிருக்கிறது. இரட்சிப்பானது இயேசு கிறிஸ்துவின் தகுதியினால் வருகிறது, எந்த தனிப்பட்ட நபரும் செய்வதற்கு அதில் ஒன்றுமேயில்லை. தேவன் அவருடைய அன்பின் மூலம் மனிதனை இரட்சித்தார். மனிதனால் என்ன செய்ய முடியும் என்பதாக அல்ல, நீங்கள் அதை குறித்து ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் ஒரு பாவியாயிருப்பதினால் தேவனுக்காக பசி தாகம் கொள்ளக்கூடிய சுபாவத்தை நீங்கள் பெற்றிருக்கமுடியாது. ஒருவரும் ஒருக்காலும் தேவனை தேடினதேயில்லை. ஆனால் தேவன் தான் மனிதனை தேடியிருக்கிறார். "முதலாவது பிதா இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான், என்னிடத்தில் வருகிற யாவருக்கும் நித்தியஜீவன் உண்டு. கடைசி நாளில் நான் அவர்களை எழுப்புவேன். என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு,(எதிர்காலத்தில் அல்ல) இப்பொழுதே, (நிகழ் காலத்தில்) முடிவில்லாத, நித்தியஜீவன். அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” ஏனென்றால் நீங்கள் அதை விசுவாசிக்கிறாய், அறிவுப்பூர்வமாய் அல்ல, இருதயத்திலிருந்து அதை விசுவாசிக்கிறாய். ஓ, அநேக ஜனங்கள், “ஓ, நான் விசுவாசிக்கிறேன்,” என்று கூறி சீர்திருத்தம் செய்ய முயற்சிக்கிறார்கள். சீர்திருத்துவது நம்முடைய வேலையல்ல! வேலையல்ல! சுவிசேஷத்தை பிரசங்கிப்பதே நம்முடைய வேலையாயிருக்கிறது. நாம் சீர்திருத்தவாதிகளல்ல. நாம் சுவிசேஷ பிரசங்கிகளாயிருக்க வேண்டும். தேவன் ஆபிரஹாமை அழைத்த மாத்திரத்தில், அவன் தன்னை வேறு பிரித்துக் கொள்ளும்படி அவர் அவனை அழைத்தார். அது வினோதமாயிருக்கிறது. இல்லையா? தேவன், ஒரு மனிதனை அழைத்தவுடனே அவனை முற்றிலுமான ஒரு வேறு பிரிதலுக்காக அழைக்கிறார். உங்களுக்கு தெரியுமா, இன்றைக்கு உலகம் ஒன்றாக கூடியிருக்கிறவர்களையே விரும்புகிறது, அவர்கள் தேசத்திலேயே சிறந்த உடையை உடுத்துகிற, ஒரு சிறிய சமுதாய மதுவிருந்து அருந்துகிற, இளம் பருவத்தினருடன் சிநேகமாக இருந்து, மோசமான நகைச்சுவை துணுக்குகளை கூறுகிற யாரோ ஒருவரை விரும்பி, அவர்களை தங்கள் மேய்ப்பராக தெரிந்துகொள்கிறார்கள். ஆனால் தேவன்“பவுலையும் பர்னபாவையும் எனக்காக பிரித்து விடுங்கள்,” என்றார். பரிசுத்த ஆவியானவர் முற்றிலுமான வேறுபிரிதலுக்காக அழைக்கிறார். (ஆமென்), வேறு பிரிதல். தேவன், “ஆபிரஹாமே, உன் இனத்தாரிடத்திலிருந்து உன்னை வேறு பிரித்துக்கொள்," என்றார். அதை செய்வது ஒரு பெரிய காரியமாயிருக்கிறது, இல்லையா? "நீ அந்நிய தேசத்தில் சஞ்சரிக்கும்படி நான் விரும்புகிறேன். மேலும் நீ இதற்கு முன்பாக இந்த வழியில் நடந்ததில்லை, ஆனால் அந்நிய மொழியை பேசுகிற அந்நியர்களின் நடுவில் நீ என்னுடன் நடக்கும்படி உன்னை வேறு பிரித்துக் கொள்ளும்படி நான் விரும்புகிறேன். நீ ஒரு யாத்திரீகனாகவும், பிரயாணியாகவும் இருப்பாய்," என்றார். கிறிஸ்துவினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பாவத்திலிருந்து தன்னை உடனடியாக பிரித்து கொள்கிறான். பரிசுத்த ஆவியானவர் உன்னை வெளியே அழைக்கிறார். ஒரு வித்தியாசமான சுபாவம் இருக்கும்படி 22. இங்கே அந்த செம்மறியாடு தீவனப்புற்களை (alfalfa) மேய்ந்து கொள்கிறது. இங்கே ஒரு பன்றி அதின் தொழுவத்தில் கழிவான உணவை புசிக்கிறது. நீங்கள் ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியிலிருந்து சுபாவத்தை எடுத்து ஒரு பன்றிக்குள் வையுங்கள், அது அந்த அசுத்தத்தை ஒருக்காலும் சாப்பிடாது, ஆனால் பயிர் வகையைச் சேர்ந்த தீவனப்புற்களை (alfalfa) சாப்பிடுவதற்கு போகும். நீங்கள் அதனைக் கழுவி சுத்தப்படுத்தி, சற்று மெருகேற்றினாலும், அது மீண்டும் பன்றியினுடைய அசுத்தத்திற்கே திரும்ப செல்லும். வேதம், "கழுவப்பட்ட பன்றி சேற்றிற்குத் திரும்பினது போல” என்று கூறுகிறது. பாருங்கள்? அது சரி. ஒரு மனிதனுக்காக தேவன் ஏதோவொன்றறை செய்ய வேண்டியதா யிருக்கிறது, மனிதன் செய்வதல்ல, தேவன் செய்கிறதாயிருக்கிறது. நாம் இன்றைக்கு மனிதனால் உண்டாக்கப் பட்ட சீர்திருத்தத்தை அதிகமாக பெற்றிருக்கிறோம். “பெயரைக் கையொப்பமிட்டு சபை புஸ்தகத்தில் பெயரை சேரு, ஒரு சபையை சேர்ந்து கொள், உங்கள் கடிதத்தை கொண்டு வா” ஒ மற்ற காரியங்கள் நடந்திருந்தால் அதற்கெதிராக எனக்கு ஒன்றுமில்லை. நீ மறுபடியும் பிறந்திருந்தால் எல்லாம் சரிதான். உன்னுடைய கடிதம் எங்கேயிருக்கிறதுதென்று கவலைப்படாதே, எப்படியாயினும் அது பரலோகத்திலிருக்கிறது, அது காகிதத்திலல்ல, ஆனால் அது ஆட்டுக் குட்டியினுடைய இரத்தத்தின் மூலம் செம்மறி ஆட்டுக்குட்டியின் தோலில் எழுதப்பட்டிருக்கிறது. அல்லேலூயா. கவனியுங்கள், “நீ உன் இனத்தாரிடத்திலிருந்து உன்னை பிரித்துக் கொண்டு அந்நிய தேசத்திற்குள் வா." நிச்சயமாக. இரவு விடுதிகளுக்கும், மற்ற எல்லா இடங்களுக்கும் நீ போவது வழக்கம். நீ போயிருக்கவே கூடாத இடங்களுக்கு போயிருக்கலாம். இப்பொழுதோ, தேவன் உன்னை அழைத்த பொழுது, அந்த விதமான வாழ்க்கையிலிருந்து உன்னை வேறு பிரித்துக் கொள்ளும்படிக்கும், ஒரு வேறுபட்ட வாழ்க்கையை வாழும் படிக்கும் அழைக்கிறார். “நான் கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் வழியை தெரிந்து கொள்வேன். இயேசுவுடன் நான் தொடங்கி இருக்கிறேன் கர்த்தாவே அதினூடாக நடத்தும்,” என்ற அந்த பழைய பாடலை எப்பொழுதாவது பாடுவதை ஞாபகங்கொள்கிறீர்களா? 23. நான் முதலில் இரட்சிக்கப்பட்ட பொழுது, என்னுடைய தாயார், “பில்லி, நீ கொண்டிருந்த உணர்வை முற்றிலுமாக இழந்து விட்டாய்,” எனக் கூறியது என் நினைவுக்கு வருகிறது. நல்லது, உலக காரியங்களை நினைக்கும்வரை அது சரிதான். நான் அதை இழந்திருக்கிறேன். ஆனால் நான் அதைக் காட்டிலும் சிறந்த ஒன்றைக் கண்டுபிடித்தேன், அது ஒரு புதிய வாழ்க்கை. இவ்விதமாக நான் நடந்து கொள்ளும் வரை (புதிய ஜீவியத்தில்) நான் வீட்டில் தங்க்க் கூடாது என்று என்னுடைய தகப்பனாரையே கூற வைத்தது. ஆனால் உலகம் முழுவதிலும் தகப்பன்மார்களையும், தாய்மார்களையும், நண்பர்களையும், தேவன் எனக்கு தந்தார். இம்மையில் அதிகமானவைகளையும், மறுமையில் நித்தியஜீவனையும் தேவன் எனக்கு தந்தார் : வேறுபிரிதல். பிறகு அதன் பேரில் தேவன் ஆபிரஹாமுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்தார். அவர் அவனை அழைத்த பொழுது ஆபிரஹாமுக்கு எழுபத்தைந்து வயது, அவனுடைய மனைவியாகிய சாராளுக்கு அறுபத்தைந்து வயது. நாற்பது, ஐம்பது, அறுபது, அவளுக்கு ஸ்திரிகளுக்கு உள்ள வழிபாடு நின்று ஏறக்குறைய நாற்பது வருடங்கள் கடந்திருந்தது. இறையியல் வரலாற்றின் படி அவன் அவளை விவாகம் செய்த அல்லது தேவன் அவனை அழைத்த போது அவர்கள் பதினேழு வயதாயிருந்தார்கள் (they was about seventeen years old). இத்தனை வருடங்களாக மனைவியாகிய அவளுடன் அவன் வாழ்ந்திருந்தான். இப்பொழுது அவளுக்கு அறுபத்தைந்து வயது. தேவன், “நான் ஏதோவொரு காரியத்தை செய்யப் போகிறேன் என்று நீ என்னை தெரிந்து கொள்ளவில்லை, இதை செய்வதற்காகவே நான் உன்னை தெரிந்து கொண்டேன். அவளுடைய அறுபத்தைந்து வயதிற்குப் பின்பு, நீ, உன் மனைவியாகிய சாராள் மூலம் ஒரு குழந்தையைப் பெறப் போகிறாய்,” என்றார். “ஆபிரஹாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் தள்ளாடாமல், தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான், ” என்று வேதம் கூறுகிறது. 24. அதன்பின் இருபத்தைந்து வருடங்களாக அவர்களுக்கு குழந்தை பிறக்கவேயில்லை என்பதை இப்பொழுது நினைவு கூறுங்கள், ஆபிரஹாமுக்கு நூறு வயதும் சாராளுக்கு தொண்ணூறு வயதுமாயிருந்தது. அவர்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று தேவன் சொன்னவுடன், அவர்கள் வெளியே சென்று எல்லா ஊசிகளையும், அந்த நாட்களில் அவர்களுக்கு தேவையாயிருந்த எல்லா பொருட்களையும் வாங்கி அதற்கு தயாராக இருந்தார்கள் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஆமேன். தேவன் அவ்விதம் சொன்னார், அத்துடன் அது முடிந்தது. ஆபிரஹாமுக்கு எழுபத்தைந்து வயதும், சாராளுக்கு அறுபத்தைந்து வயதும் இருக்கும்போது தன் தடியை பிடித்துக்கொண்டு நடுங்கினவனாக நகரத்திற்கு சென்று, “நல்லது, மருத்துவரே, நீர் என்னுடைய வீட்டிற்கு வரும்படிக்கான ஏற்பாடுகளை செய்ய விரும்புகிறேன். நாங்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள போகிறோம். என்னுடைய மனைவிக்கு அறுபத்தைந்து வயதாகிறது” என்று இப்பொழுதுள்ள நாட்களில் ஆபிரஹாம் போய் சொல்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஏன், அவர்கள், "ஆபிரஹாமே, உமக்கு சற்று மூளை கோளாறு உள்ளது,” என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு நபரும்... இதோ, இங்கே இது இருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்., உண்மையாக தேவனை பின்பற்றுகிற ஒவ்வொரு நபரும் சற்று மூளைக் கோளாறு ஏற்பட்டுள்ள நபராக உலகத்தால் கருதப்படுகிறார்கள். ஆமென். சரி. 25. இன்று எழுபத்தைந்து வயதான ஒரு கிழவன் அறுபத்தைந்து வயதுள்ள மனைவியுடன், பதினேழு வயது முதல் அவளுடன் வாழ்ந்து, பிள்ளையில்லாமல் முழுவதுமாக மலடாய், அவனும் மலட்டுத்தன்மை கொண்டவனாய், வெளியே சென்று குழந்தை பிறக்க போவதாக சொல்லி குழந்தைக்கான துணிகளை ஆயத்தம் செய்து வைப்பதை உங்களால் நினைக்க முடியுமா? ஏன்? இயற்கையான முறையில் அது எவ்விதம் தோன்றினாலும் அது ஒரு பொருட்டல்ல, தேவன் அவ்விதம் தான் கூறினார். இப்பொழுது வாலிபர்களே, வாலிப பிள்ளைகளே, இதை மன்னியுங்கள். நான் உங்கள் சகோதரன். கவனியுங்கள், முதல் மாதத்தின் இறுதியில் அல்லது ஆரம்ப நாட்களில், “சாராளே, நீ எப்படி உணருகிறாய்?” என்று ஆபிரஹாம் சொல்வதை நான் கேட்கிறேன். “எந்த வித்தியாசமும் இல்லை" "நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், எப்படியும் நாம் அதை பெறப்போகிறோம்". முதல் மாதம் கடந்தது. “சாராளே, அதைக் குறித்து என்ன?” “எந்த வித்தியாசமும் இல்லை.” “தேவனுக்கு ஸ்தோத்திரம், எப்படியும் நாம் அதை பெற்றுக்கொள்ள போகிறோம்." முதல் வருடம் கடந்தது, “சாராளே, அதைக் குறித்து என்ன?” “எந்த வித்தியாசமும் இல்லை.” “நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், எப்படியும் நாம் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளப் போகிறோம்.” 26.“தேவன் சரியாக ஒரு நிமிடத்தில் பதில் அளிக்கவில்லையென்றால், நல்லது நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை,” என்று உங்களை போல என்னை போல பலவீனம் அடைவதற்கு பதிலாக, நாட்கள் நீண்டு போகப் போக, குழந்தை பிறப்பதற்கு முன்பு, அந்த சம்பவம் மகத்தான அற்புதமாய் நடக்கப் போகிறது என்று அறிந்தவனாய், ஆபிரஹாம் எல்லா நேரங்களிலும் பலமடைந்தான். நீங்கள் ஆபிரஹாமின் பிள்ளைகளாயிருந்தால், நீங்கள் அதே வகையான விசுவாசத்தை பெற்றிருக்கிறீர்கள். அல்லேலூயா. அங்கு நீங்கள் பயப்பட வேண்டாம். அல்லேலூயா என்றால் “நம்முடைய தேவனை துதியுங்கள்”என்று பொருள். கவனியுங்கள். நாட்கள் செல்ல செல்ல ஆபிரஹாம் பலமடைந்து கொண்டிருந்தான். விசுவாசித்துக் கொண்டு, அவன் பலம் அடைந்தான், அவனும், சாராளும். இப்பொழுது தேவன் ஆபிரஹாமை அழைத்த காரணத்தால் அவன் அவ்விதமான விசுவாசத்தை உடையவனா யிருந்தானென்றால், ஆபிரஹாமின் பிள்ளைகளும் அவ்விதமான விசுவாசத்தையே உடையவர்களாகயிருக்கிறார்கள். ஆபிரஹாமுக்கு அந்த விசுவாசம் இருந்ததற்கு காரணம் என்னவென்றால் தேவன் அவனில் இருந்த தரத்தைக் கண்டு, அவனை அழைத்து முகமுகமாய் பேசியதுதான். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அவர்கள் முகமுகமாய் தேவனுடன் பேசும்பொழுது ஆபிரஹாமின் விசுவாசத்தை பெற்றுக்கொள்கிறார்கள். இப்பொழுது ஆபிரஹாமின் வித்து என்றால் என்ன? ஒரு நிமிடத்தில் அதை காண்போம். இப்பொழுது ஈசாக்கு ஆபிரஹாமின் வித்தாயிருந்தான். ஈசாக்கு மூலம் கிறிஸ்து வருகிறார். “கிறிஸ்துவுக்குள் மரித்த நாமும் ஆபிரஹாமின் வித்தாகவும் வாக்குத்தத்தின்படி சுதந்திரவாளியாகவும் இருக்கிறோம்” என்று வேதம் சொல்கிறது. ஆபிரஹாமுக்கு அவர் கொடுத்த அதே வாக்குத்தத்தம் தான் அவர் நமக்கு கொடுக்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாயிருந்தால், ஆபிரஹாமின் வித்தாக துவங்குகிறோம், அதே வாக்குத்தத்தின்படி சுதந்திரவாளிகளாகவும் ஆகிறோம். பின்னர் ஆபிரஹாமில் இருந்த அதே விசுவாசம் அவருடைய பிள்ளைகளிடத்திலும் இருக்கிறது. அவர்கள் இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைக்கிறார்கள். காரணம் தேவன் அவ்விதம் உரைத்துள்ளார்... சகோதரனே, இன்றிரவு நீங்கள் அந்தவிதமான விசுவாசத்தை பெற்றிருப்பதை நான் காண முடியுமானால் அடுத்த ஐந்து நிமிடங்களில் நம்மிடையே பலவீனமான ஒரு நபர் கூட இருக்க மாட்டார். 27. தேவன் சொன்ன காரணத்தால் இல்லாதவைகளை இருந்தது போல ஆபிரஹாம் அழைத்தான். “ஆபிரஹாம் உனக்கு எப்படி தெரியும்?” "தேவன் அவ்விதம் கூறினார்.” "எப்படி அதை நிரூபிப்பாய்?” "தேவன் அவ்விதம் கூறினார்.” “ஏன் இது எல்லா இயற்கைக்கும் மாறாயிருக்கிறது" “ஆனால் தேவன் அவ்விதம் கூறினார்.” மருத்துவர், “நீ சுகமடைய முடியாது, "என்று கூறுகிறார். ஆனால், “தேவன் அவ்விதம் கூறினார்.” புரிகிறதா? மருத்துவர், “நீ மீண்டும் நடக்க மாட்டாய்,” என்கிறார். “ஆனால் தேவன் அவ்விதம் கூறினார்.” ஆமென். 28. மேயோ மருத்துவமனை, என்னிடம், "மூன்று நிமிடங்கள்தான் நீ உயிர் வாழ்வாய்,” என்று கூறினார்கள். ஆனால் தேவன், “நீ நீண்ட காலம் வாழப் போகிறாய்,” என்று கூறினார். இங்கே நான் இருக்கிறேன். நான் உண்மையில் பார்வையற்றவனாக இருந்தேன். என் பார்வை எனக்கு மீண்டும் வராது என மருத்துவமனை கூறியது. ஆனால் நான் பார்வையுள்ளவனாய் இங்கே இருக்கிறேன். தேவன் அவ்விதம் கூறினார். 29. தேவன் சொல்லும்பொழுது, அது அந்தவிதமாகத்தான் இருக்கிறது. ஒரு கிறிஸ்தவன் தான் காணும் காரியங்களை கணக்கிடுவதில்லை அல்லது காண்பதில்லை, நீங்கள் எப்படியும் உங்கள் கண்களால் காண முடியாது. உங்களால் முடியாது. நிச்சயமாக உங்கள் கண்களால் காண மாட்டீர்கள். உங்கள் இருதயத்தைக்கொண்டு காண்கிறீர்கள். "பார்(see)” என்றால் “காண்(look)” என்று அர்த்தமல்ல. "பார்" என்றால் புரிந்துகொள் என்று அர்த்தம் இயேசு நிக்கொதேமுவிடம்" நீ மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காண மாட்டாய் என்றார். தேவனுடைய ராஜ்யத்தை புரிந்து கொள்ள மாட்டாய்" என்ற சரியான மொழிபெயர்ப்பைப் பாருங்கள். யாராவது எதையாவது செய்து உங்களுக்கு காண்பிக்கிறார்கள். நீங்கள், “என்னால் பார்க்க (see) முடியவில்லை” என்கிறீர்கள். நீங்கள் அதை கண்டு(look) கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரை தேவனுடைய ராஜ்ஜியம் என்ன என்பதை ஒரு போதும் அறிந்து கொள்ளவே முடியாது. பிறகு நீங்கள் மறுபடியும் பிறந்தால் அது என்னவாயிருக்கிறது என்று புரிந்து கொள்வீர்கள். பிறகு, ஜனங்களை மகிழ்ச்சியாயிருக்கச் செய்வது எது என்பதையும், தொல்லையின் நடுவில் அவர்களை நிற்கச் செய்வது எது என்றும், “அது அவ்விதம் தான்” என்று சொல்லி அவர்கள் அசையாமல் நிற்கிறதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். “அது அவ்விதம் தான்” ஒரு போதும் அசையாது. தேவன் அவ்விதம் சொன்னார், அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அன்றொரு இரவில் நான் உங்களுக்கு சொன்னேன். உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். ஜீவியத்தில் மகிழ்ச்சியாயிருக்கவும் சுகமடையவும் அந்த விசுவாசத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறக்கும்பொழுது உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உங்களுக்குள் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் அங்கே வருகிறபடியால் அதுவே உங்கள் எல்லா தேவையுமாயிருக்கிறது. அது பரிசுத்த ஆவியானவர். அவர் மீதமுள்ள எல்லா தேவைகளையும் சந்திக்கிறார். இப்பொழுது, ஆபிரஹாமை கவனியுங்கள், நம்முடைய கிறிஸ்தவர்கள், இல்லையானால் ஆபிரஹாமின் வித்துக்களை கவனியுங்கள். யார் என்ன சொன்னாலும், சொன்னாலும், அவர்களுக்கு கவலையில்லை. தேவனுடைய வார்த்தையை அப்படியே விசுவாசிக்கிறார்கள். 30. இங்கே சில நாட்களுக்கு முன்பு, நான் சார்ந்திருக்கிற அதே சபையை சேர்ந்த ஒரு அருமையான மருத்துவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர், “பில்லி, என்னவென்று தெரியுமா? நான் உங்களுடைய கூட்டத்தில் இருந்தேன்," என்றார். அவர், "நடந்த எல்லாவற்றையும் நான் பாராட்டுகிறேன், ”என்று கூறினார். மேலும் அவர், “பில்லி, உங்களிடம் நான் ஒன்றைக் கேட்கட்டும். நீங்கள் பரிசுத்த உருளையாக ஆவதற்கு, அதிக நாள் செல்லாது, ” என்றார். நான், “மருத்துவரே, நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்றேன். அவர், “ஏனென்றால் அந்த ஜனங்கள் வெறுமனே உணர்ச்சிவசப் பட்டிருக்கிறார்கள்” என்றார். நான், “சரி, அறிவியலின்படி உணர்ச்சிவசப்படாத எதுவுமே மரித்துவிட்டது. உங்களுடைய மார்க்கம் அதை குறித்து கொஞ்சமாவது உணர்ச்சிவசப்படாவிட்டால், நீங்கள் அதை அடக்கம் செய்வது நல்லது, அது மரித்து விட்டது,” என்றேன். அவர், “இப்பொழுது, பில்லி” என்றார். நான், “நான் உங்களிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறேன்,” என்றேன். அவர், “அந்த ஜனங்கள் அதிக உற்சாகமடைகிறார்கள் என்பதை நீர் அறியவில்லையா? நீங்கள் பிரசங்கிக்க ஆரம்பிக்கிக்கிறீர். அவர்கள் அதிக உற்சாகமடைகிறார்கள். அதுதான் அவர்களை அழவும், ஆமென் என்று சத்தமிடவும் வைக்கிறது,” என்று சொன்னார். 31. நான், "இப்பொழுது, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அதிக உணர்ச்சிவசப்படுவதைக் காட்டிலும் அவர்களுக்கு வேறொன்றுமில்லை; வெறுமனே அமர்ந்திருந்தார்களானால், அவர்கள் உணர்ச்சி வசப்படமுடியாது. அந்த நரம்பை உணர்ச்சிவசப்படுத்த ஏதோ ஒன்று அங்கிருக்க வேண்டும்,” என சொன்னேன். குறுகிய பாதையிலே நீங்கள் தனியாக நடந்து போகையில், உங்களுக்கு பயமே இல்லையென்றால், நீங்கள் பயப்படவில்லை என்று அர்த்தம். நீங்கள் பயப்பட்டீர்களானால். ஏதோஒன்று உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. நிச்சயமாக, அது தான். நான் அவரிடம், உண்மையாகவே ஒரு உணர்வில் அவர்கள் உற்சாகமடைகிறார்கள் ஆனால் உற்சாகமடையச் செய்கிற உணர்ச்சியைக் குறித்தென்ன?” என்று சொன்னேன். நான் அவரிடம் “நீங்கள் பயமடைவதைப் போலவே, ஏதொ ஒன்று உங்களை பயமடைய செய்ய வேண்டும். அதைப் போலவே அந்த ஜனங்களை ஏதொ ஒன்று உணர்ச்சிவசப்படச் செய்ய வேண்டும். அது என்னவென்றால், அவர்கள் அருகில் இருந்து, தேவனுடைய வார்த்தையை எடுத்து, அவர்களுக்கு நித்திய ஜீவனைத் தருகிற பரிசுத்த ஆவி. அது அதிக உற்சாகமடைய செய்யக்கூடியது,” என்று சொன்னேன். நிச்சயமாகவே. கவனியுங்கள். விசுவாசமில்லாமல் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” உங்கள் இரட்சிப்பை உங்களால் பார்க்க (see) முடியாது. உங்களால் இயேசுவை பார்க்கமுடியாது, ஆனாலும், நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்கள். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் நாம் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள் காணக்கூடாதவைகளை (விசுவாசத்தால்) நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்கள் கண்களால் பார்க்க கூடியவைகளை அல்ல,ஆனால் கண்களால் பார்க்க முடியாதவகளை. 32. சிறிது காலத்திற்கு முன்பு நான் கனடாவில் இருந்தேன். சுமார் பத்து பதினைந்தாயிரம் பேர் மாண்ட்ரில் கூட்டத்திலிருந்தார்கள். நாங்கள் அங்கே ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி கொண்டிருந்தோம். தெருவில் கீழே வந்து கொண்டிருந்தபோது சகோ. பாக்ஸ்டரும் நானும் கவனித்துக் கொண்டிருந்தோம். அங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அமெரிக்காவிற்குள் போகக்கூடிய எங்கோ ஓர் வழியில் ஒரு நபர் நின்று கொண்டு கிட்டார் வாசித்து கொண்டிருந்தார். இங்கிருக்கிற மாடு மேய்ப்பவர்களை உங்களுக்கு தெரியும். இப்படியாக அவன் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தான். அந்த நபர் வெளியே நடந்து வந்து, "நீங்கள், எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், ” என்றேன். “அந்த தொலைக்காட்சி பெட்டியை (SET) நான் உங்களுக்கு விற்கட்டும், ”என்று சொன்னார். அதற்கு நான், “இல்லை, இல்லை, நன்றி. நான் இவ்விதமாக கடந்து போகிறேன்,” என்றேன். "ஓ, சரி. நீங்கள் இதை வாங்கி உங்கள் ஊருக்கு கொண்டு செல்வீர்களானால் நான் அதற்கு வரி விலக்கு பெற்று தருகிறேன்” என்று சொன்னார். நான், "இல்லை இல்லை நன்றி”, என்று சொல்லி,” நான் வெறுமனே அதை பார்த்துக்கொண்டிருந்தேன்,” என்றேன். “அது நல்லது. அது எங்கிருந்து வருகிறது?” என்று கேட்டேன் “அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் அல்லது வேறு எங்கோ இருந்து”, என்று சொன்னார். நான், “ஊ-ஹூம்” என்றேன். “அது மிகவும் நல்லது”. “அப்படியே கடந்து போகிறீர்களா?” என்று கேட்டார். நான், இல்லை, இல்லை, நான் இங்கே சில நாட்கள் இருப்பேன்”, என்றேன். அவர், ”ஓஹோ”என்றார். நான், "ஆம், ஐயா. நான் இங்கு ஒரு கூட்டத்திற்காக வந்திருக்கிறேன்”, என்றேன். 33. "ஓ, நீங்கள் இங்கிருக்கிற இந்த பிரன்ஹாம் கூட்டத்தை சேர்ந்தவர் இல்லைதானே?” என்றார். நான், "ஆம் ஐயா,”என்றேன். அதற்கு அந்த நபர்,” நீங்கள் அந்த நபரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். நான், "நல்லது, எனக்குத் தெரியாது”, என்றேன். அவர், “நல்லது, நான் இதுவரை பார்த்ததிலேயே அவன் ஒரு பெரிய மாய்மாலக்காரன் என நான் நினைக்கிறேன்,” என்றார். அதற்கு நான், “நீங்கள் உண்மையிலேயே அப்படி நினைக்கிறீர்களா?”, என்றேன். அவர், "ஆம் ஐயா அது உண்மை. முதலாவது காரியம் அவன் செய்வது மனோதத்துவமேயன்றி வேறல்ல,” என்றார். நான், நேற்று இரவு நீங்கள் அங்கு இருந்தீர்களா?" என கேட்டேன். அவர், “ஆம்” என்றார். நான்," அவர்கள் அங்கு கொண்டுவந்த முடமான சிப்பாயை குறித்து என்ன?” என்றேன். அவர், “அந்த சிப்பாய் முயற்சி செய்திருந்தால் அவன் எப்படியும் நடந்திருப்பான்” என்றார். ஹூம். நான், “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” எனக் கேட்டேன். அவர், "ஓ இல்லை. எனக்கு அப்படிப்பட்ட காரியங்களில் நம்பிக்கை இல்லை,” என்றார். நான், "ஓஹோ” என்றேன். அவர், “நான் ஒரு விஞ்ஞானி. எந்த ஒரு காரியமும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாவிட்டால் அது முழுவதும் தவறு,” என சொன்னார். நான், ஓ, விவாதத்தில் எதிர்பக்கத்தை எடுப்பதை நான் வெறுக்கிறேன்,” என்றேன். ஆனால் நான், “உண்மையான காரியங்களை அறிவியலால் நிரூபிக்கமுடியாது என் நான் உங்களுக்கு கூறப்போகிறேன்,” என்றேன். அவர், "ஓ, நீங்கள் தவறாய் இருக்கீறீர்கள்,” என்றார். நான், “எல்லாம் சரிதான். எனக்கு வேண்டும்.” என்றேன். அவர், "அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாவிட்டால் அது உண்மையல்ல,” என்றார். 34. நான், “நல்லது நண்பரே, உண்மையானவைகளை நீங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கமுடியாது என்று நான் விசுவாசிக்கிறேன். அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட எதுவும் உண்மையாக இருக்க முடியாது. அது அழியக்கூடியது” என்றேன். அவர், “ஓ” என்றார். மேலும், “நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார். நான், "உங்களிடம் சிலவற்றைக் கேட்க வேண்டும். நீங்கள் திருமணமானவரா?” என்றேன். அவர், “நிச்சயமாக” என்றார். “ஏதாவது குழந்தைகள் உண்டா?” “ஆம்” நான், “நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கிறீர்களா?” என்றேன். அவர், “ஆமாம் ஐயா” என்றார். நான்,“அன்பு என்றால் என்ன? அறிவியல் (விஞ்ஞானப்பூர்வமாக) ரீதியாக அன்பு என்றால் என்ன என்பதை எனக்கு காட்டுங்கள். வேறு எந்த பெண்ணையும் விட அந்த பெண்ணிடத்தில் என்ன வித்தியாசம் உண்டு? வேறு எந்த குழந்தைகளையும் விட அந்த குழந்தைகளிடத்தில் என்ன வித்தியாசம் உண்டு? அன்பு.... நீங்கள் விரும்பினாலும் அந்த அன்பை அறிவியல் (விஞ்ஞானப்பூர்வமாக) ரீதியாக நிரூபிக்க முடியாது என்றேன். நான், “உனக்கு புத்தி உண்டு என்பதை அறிவியல் ரீதியாக உன்னால் நிரூபிக்கமுடியாது,” என சொன்னேன். அது சரி. உன்னால் முடியாது. 35. நான், “உண்மையான விஷயங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை” என்றேன். அவை “காணப்படாதவைகளின் நிச்சயமாய் இருக்கிறது” நான், “நல்லது, அங்குள்ள படத்தை நோக்கிப்பார்” என்றேன். “அந்த படம் அந்த அறையினூடாகத்தான் வருகிறது. அது தொலைக்காட்சியில் உள்ளதைப் போலவே. அவர்கள் அந்த தரிசனத்தை அப்படித்தான் பார்க்கிறார்கள். வெளியே வரக்கூடிய ஏதோ ஒன்று (அலைகள்). ஏன் வானொலியால் தரிசனத்தை பார்க்க முடியவில்லை?” என்றேன். அவர், “அது அவ்விதத்தில் செய்யப்படவில்லை” என்றார். நான், “கவனித்தீர்களா? தேவன் சபையில் சிலரை தீர்க்கதரிசிகள், சிலரை போதகர்கள், சிலரை சுவிஷேசகர்கள் என்று பொருத்தியிருக்கிறார்,” என்றேன். அவர், "ஓ, அது முட்டாள்தனம், எங்களுக்கு அதை அனுப்பக்கூடிய நிலையம் உண்டு” என்றார். நான், “எங்களுக்கும் கூட உண்டு” என்றேன். ஆமென். அவர், “அந்த நபர் சரியானவர் என்று நம்புகிறீர்களா?” என்றார். 36. நான், “ஆம் ஐயா, நான் தான் அந்த நபர்,” என்றேன். அவர், “ நீங்கள் சங்கை பிரன்ஹாம் இல்லை தானே?” என்றார். நான், “நான் தான்,” என்றேன். அவர், "நான் உங்களை மாய்மாலக்காரன் என்று உங்கள் முகத்துக்கு நேரே சொன்னேனே,” என்றார். நான், “எப்பொழுதுமே அதை செய்யக்கூடிய வழி அதுதான். என் முகத்துக்கு நேரே பேசுங்கள், என் முதுகுக்கு பின்னால் அல்ல,” என்றேன். 37. ஆனால் பாருங்கள் அவ்வளவுதான் நண்பனே. எங்களிடம் அனுப்பக் கூடிய நிலையம் உள்ளது: அதுதான் பரலோகம். நம்மிடம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையமும் உள்ளது: அதுதான் உங்களுடைய இருதயம். தேவனுடைய வார்த்தையை உண்மையாக உங்களுடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது அது நேர்மறையானதாக மாறுகிறது. மற்றவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் குறித்து கவலையில்லை. ஆனால், நீங்கள் அதை பார்க்கிறீர்கள். ஆபிரஹாம் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக என்னப்பட்டது. வருடங்களோ கடந்து போய்க் கொண்டிருக்கையில் அவள் இன்னுமாய் விசுவாசித்தாள். ஆபிரஹாம் விசுவாசித்தான். (நம்முடைய நேரம் போய்க் கொண்டிருக்கிறது.) பதினேழாவது அதிகாரத்தில் (ஆதியாகமம்) அதை ஒரு கணம் எடுப்போம். 17-வது அதிகாரத்தில் உண்மையாகவே அவனுக்கு வயது சென்றபிறகு, அவனுக்கு இப்பொழுது தொண்ணூறு வயது. தேவன் அவனுக்கு வேறு வேறு பெயர்களில் தோன்றினார். ஆனால் 17-ம் அதிகாரத்தில் அவர் சர்வ வல்லமையுள்ள தேவனாக தோன்றி “நான் சர்வ வல்லவர்” என்றார். இப்பொழுது அதற்கான உண்மையான எபிரேய வார்த்தை, “எல்ஷடாய்”அதற்கு “பெண்களை போன்று மார்பகங்கள்” அல்லது “மார்பு உடையவர்” என்று அர்த்தம். அவர், " ஆபிரஹாமே உனக்கு வயதாகிவிட்டது. உனக்கு ஏறக்குறைய நூறு வயதாகிவிட்டது, ஆனால் என்னுடைய வாக்குத்தத்தம் இன்னும் நன்றாகவே இருக்கிறது. ஒரு தாய் தன் குழந்தைக்காக கொண்டிருக்கிறதை போல நானும் மார்பகங்களை உடைய தேவன். தன்னுடைய சிறு குழந்தை எவ்வளவாய் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் ஒரு தாய் அந்த குழந்தையை மார்போடு அணைத்து பிடிக்கும் பொழுது, அந்த குழந்தை தன் தாயிடமிருந்து பெலனை பெற்றுக்கொள்கிறது, தன் தாயின் பெலனால் குழந்தை குணமாக்கப்படுகிறது” என்றார். மேலும் அவர், “ஆபிரஹாமே, உனக்கு வயதாகிவிட்டது. நீ உண்மையான தொண்ணூறு வயதான நபர், சாராளுக்கு இப்பொழுது எண்பது, ஆனால் நான் மார்பகங்களை உடைய தேவன். அப்படியே தரித்திருங்கள், என்னுடைய வாக்குத்தத்தத்திலிருந்து பெலனை பெற்றுக் கொள்ளுங்கள். நான் அதை நிறைவேற்றப் போகிறேன்,” என்றார். அல்லேலூயா. அவர் இன்று இரவும் கூட எல்ஷடாய், மார்பகங்களை உடைய, சர்வ வல்லமையுள்ள தேவன். “அவர் நம்முடைய மீறுதலினிமித்தம் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.” அனேக காரணங்கள், மார்பகங்களை உடையவர். 38. அதன் பிறகு அவர், வாக்குத்தத்தத்தை அவனுக்கு உறுதிப்படுத்த ஆபிரஹாமை வெளியே அழைத்தார். “நானோ இன்னும் குழந்தை இல்லாதவன், தமஸ்குவை சேர்ந்த இந்த எலியேசரே என்னுடைய வீட்டில் ஒரே ஒரு வாரிசு. நான் குழந்தை இல்லாமல் இருப்பதை பார்க்கும்போது, அவன் என் ஒரே வாரிசாக இருக்கப் போகிறான். என்னிடத்திலுள்ள ஒன்றே ஒன்று வேலைக்காரியாகிய ஆகார் மூலமாக உண்டான இஸ்மயேல் மாத்திரமே, ”என்று ஆபிரஹாம் சொன்னான். அவர் அதற்கு, "இங்கே வெளியே வா, ஆபிரஹாமே. உனக்கு பிறகு உனக்கும் உன் சந்ததிக்கும் நான் செய்யப்போகிறதை உனக்கு விளக்கி காட்டப்போகிறேன்,” என்றார். இப்பொழுது ஆபிரஹாமின் பிள்ளைகளே, அமைதியாக தரித்திருந்து கேளுங்கள். துரிதமாக, நேராக நாம் பொருளுக்கு செல்வோம். அவர் ஆபிரஹாமை வெளியே எடுத்தார். ஆபிரஹாம் தேவனுக்கு பலியை செலுத்தினான். அவன் ஒரு சிறிய கிடாரியையும், ஒரு மூன்று வயதுள்ள ஒரு பெண் வெள்ளாட்டையும் இவைகளோடே கூட ஒரு ஆண் செம்மறியாட்டு கிடாரியையும் துண்டங்களாக வெட்டி பிரித்து கூட்டி வைத்தான். ஆனால், புறாவையும் வெளிர் நிறமான புறாவையும் துண்டங்களாக பிரிக்கவில்லை. ஓ, நமக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். புறாவையும் வெளிர் நிறமான புறாவையும் ஏன் துண்டங்களாக பிரிக்கவில்லை என்பதை ஒருவேளை நாளைக்கு பார்ப்போம். இதுவாகத்தான் அது இருந்தது. ஒரு புறாவோ, வெளிர் நிறமான புறாவோ பிரதிநிதிப்படுத்தவோ அல்லது சுகபடுத்துதலுக்காகவோ பலியாக செலுத்தப்பட்டது. தேவன் அவருடைய உடன்படிக்கையை நியாயப்பிரமானத்திலிருந்து கிருபைக்கு மாற்றினார். ஆனால் அவர் தம்முடைய சுகப்படுத்தலை மாற்றிக்கொள்ளவில்லை. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அவன் (ஆபிரஹாம்) அவைகளை (பறவைகளை பிரிக்கவில்லை. அவன் அவைகளை ஒன்றாக சேர்த்து வைக்கும் பொழுது அவைகளின் மேல் அமர வந்த பறவைகளை சூரியன் மறையும் வரை துரத்தினான். இப்பொழுது சற்று கூர்ந்து கவனியுங்கள். இப்படித்தான் உடன்படிக்கை செய்யப்பட்டது. இதனால்தான் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்திருக்கிறார். இதனால்தான் அவர் செய்வதாக நீங்கள் பார்க்கிற காரியங்களை அவர் இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிறார். 39. அவனுக்கு பிறகு வரும் அவனுடைய சந்ததிக்கு தேவன் தான் என்ன செய்யப் போகிறார் என்பதை ஆபிரஹாமுக்கு ஒரு முன் அடையாளமாக காட்டிக் கொண்டிருந்தார்; அது என்னவென்றால், ஆபிரஹாமில் இருந்து ஈசாக்கும், ஈசாக்கில் இருந்து கிறிஸ்து வருவதுமே. கிறிஸ்துவின் மூலமாக எந்த விதமான பலியை தான் பலியிடப்போவதாக காட்டிக்கொண்டிருந்தார். இதனுடைய முன் அடையாளத்தை ஆபிரஹாம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ஈசாக்கை பலியிடும்படியாக மலைக்கு ஆபிரஹாம் போனபோது தேவன் ஈசாக்கை தப்ப வைத்தார். ஆனால் தன் சொந்த குமாரனையோ தப்பவிடவில்லை, ஏனென்றால் மரக்கட்டைகளை கட்டி எடுத்துக் கொண்டு சரியாக அதே மலையின் மேல் ஏறிசென்ற ஈசாக்கு கிறிஸ்துவினுடைய நிழல் மாத்திரமே. நாம் பார்த்து கொண்டிருக்கிற இந்த பாடத்தில் இன்றிரவோ அல்லது நாளையோ இந்த காரியத்திற்கு வரலாம். கவனியுங்கள். இது மிகவும் அருமையானது. அவன் அந்த பறவைகளை சூரியன் மறையும் வரைக்கும் அதிலிருந்து துரத்தி விட்டான். கவனியுங்கள். அதன்பிறகு ஆபிரஹாமுக்கு ஆழ்ந்த நித்திரை வந்தது. "முதலாவது காரியம், ஆபிரஹாமே, இதைக் குறித்து நீ செய்யக்கூடிய காரியம் அங்கே ஒன்றுமே இல்லை என்பதை உனக்கு காட்டும் படிக்கு உன்னை தூங்க வைக்கப் போகிறேன். இதுதான் என்னுடைய உடன்படிக்கை. இதைக் குறித்து நீ செய்யக்கூடிய ஒரு காரியமும் அங்கே இல்லை, சகோதரனே. இதைக் குறித்து நீ செய்து முடித்த ஒரு காரியமும் அங்கே இல்லை, சகோதரியே. அது உனக்காக தேவன் கிறிஸ்துவுக்குள் என்ன செய்தார் என்பதே. நீங்கள் நல்லவர்களாய் இருந்ததினால் அல்ல. உங்கள் தாய் நல்லவர்களாய் இருந்ததினால் அல்ல. ஆனால் என்ன? கிறிஸ்து நல்லவராய் இருந்ததினாலும் உங்களை அழைத்ததன் மூலம் கிறிஸ்து என்ன செய்தார் என்பதுதான். 40. அவனைத் தூங்க வைத்தார். இப்பொழுது அதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் தூங்கின பிறகு பயங்கரமான காரிருள் வந்தது. அதின் அர்த்தம் என்ன? நரகம், பிரிதல். ஒவ்வொரு பாவியும் அதற்கு பாத்திரனாயிருக்கிறான். பிரிதல். அதற்கு பிறகு மரணம் என்கிற எரிகின்ற அக்கினி இருந்தது: மரணத்திற்கு பிறகு ஒவ்வொரு பாவிக்கும் பிரிதலும் நரகமும் இருக்கிறது. அதற்கு பிறகு அக்கினிஜுவாலை கடந்து சென்றது. இந்த மணி நேரத்திலிருந்து நீங்கள் ஒருபோதும் அவிசுவாசிக்க மாட்டீர்கள் நம்புகிறேன். இந்த பயங்கரமான காரிருளாகிய பிரிக்கப்படுதலுக்கு மரணத்திற்கு, ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக வந்தாக வேண்டும் என்பதை ஆபிரஹாம் தூக்கத்தில் இருந்தபோது தரிசனத்தில் காட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு மனிதனும் நரகத்திற்கு பாத்திரவானாய் இருக்கிறான். ஏனென்றால் அவன் ஒரு பாவி: அவன் விழுந்து போனான். அவன் ஒரு பாவிக்கு பிறந்த பிள்ளையாய் இருக்கிறான், அதற்கு பிறகு, அந்த வெள்ளை நிற ஒளி கடந்து போனது, வேறு வார்த்தைகளில் சொன்னால், இஸ்ரயேலை பின் தொடர்ந்த அதே அக்கினி ஸ்தம்பம் தான் அது. இன்றிரவு இங்கிருக்கிற பரிசுத்த ஆவியானவர் தான் அது. ஒவ்வொரு துண்டங்களுக்கும் நடுவாக அது கடந்து சென்றது. ஏதோ ஒருநாளிலே கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக அவர் என்ன செய்வார் என்பதை அவருடைய கிருபையினால் தேவன் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். இப்பொழுது, ஆணையிடுதலுக்கு வருகிறோம். அவர் அந்த பலிகளுக்கு மேல் ஆணையிட்டுக்கொண்டார். இன்றிரவும் அவர் தன்மீது ஆணையிட்டிருக்கிறார். ஆணையிட்டுக்கொள்வதற்கு தன்னை விட மேலானவர் இல்லாததால் அவர் தன்மீது தானே ஆணையிட்டுக்கொண்டார். அவர் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வார். ஆமென். அவருடைய வாக்குத்தத்தத்தை அவர் காத்துக் கொள்வார். அவர் செய்வார் என வெறுமனே சொல்லவில்லை ஆனால் அவர் செய்வார் என ஆணையிட்டுக்கொண்டார். 41. “நீங்கள் என்ன என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் சகோதரன் பிரன்ஹாமே?” தேவன் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை நீங்கள் காணக்கூடிய இடத்திற்கு உங்களை கொண்டு போக முயற்சிக்கிறேன். ஆகையால்தான் இந்தக் காரியங்கள் நடக்கின்றன. அவைகளையெல்லாம் செய்வதாக தேவன் வாக்கு கொடுத்தி ருக்கிறார். அவர் அவற்றை செய்தாக வேண்டும். தேவனாய் இருக்க வேண்டுமென்றால், அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்ள வேண்டும், சகோதரர்களே. கவனியுங்கள். அநேக வழிகளில் நாம் உடன்படிக்கை செய்கிறோம். இங்கே அமெரிக்காவில் நாம் உடன்படிக்கை செய்யும்போது, நாம் வெளியே போய் ஒர் ஒப்பந்தம் செய்து கையை நீட்டி ஒருவரோடு ஒருவர் கரங்களை குலுக்கி, “அவ்வளவுதான் பையனே, அதை (உடன்படிக்கையை -ஆசி) உறுதிசெய். அவ்வளவுதான். சரி. நாம் உடன்படிக்கை செய்து கரங்களை குலுக்கிக்கொள்கிறோம். இந்த விதமாகத்தான் நாம் உடன்படிக்கையை செய்கிறோம். ஜப்பானில் ஒர் உடன்படிக்கை செய்வதில் வேடிக்கையான ஒரு வழி அவர்களுக்கு இருந்தது. அவர்கள் வெளியே போய் தங்களுடைய ஒப்பந்தத்தை செய்து, பின்னர் கொஞ்சம் உப்பை எடுத்து ஒருவர் மேல் ஒருவர் அதை வீசிக் கொள்கிறார்கள். அந்த விதமாகத்தான் ஒருவர் மேல் ஒருவர் உப்பை வீசி அவர்கள் ஒரு உடன்படிக்கையை செய்து கொள்கிறார்கள். ஆனால் ஆபிரஹாமின் நாட்களில் அவர்கள் ஒரு உடன்படிக்கை செய்யும் விதம், தேவன் ஒரு உடன்படிக்கை செய்யும் விதம் என்னவென்றால் அவர்கள் ஒரு மிருகத்தை எடுத்து அதை இரண்டாக பிளந்து விடுவார்கள் பின்னர் அவர்கள் ஒரு காகிதத்தை எடுத்து அவர்களுடைய ஒப்பந்தம் என்னவோ அதை இந்த காகிதத்தில் எழுதுவார்கள். அந்த காகிதத்தை இரண்டாக கிழித்து ஒரு மனிதன் ஒரு பாகத்தையும் மற்றொரு மனிதன் அதனுடைய இன்னொரு பாகத்தையும் எடுத்துக் கொள்வான். பலியிடப்பட்ட அந்த மரித்த சரீரத்தின் மீது அவர்கள் சத்தியம் பண்ணிக்கொள்வார்கள். அது என்னவென்றால் அந்த உடன்படிக்கையை அவர்களில் யாராவது முறித்தால், அவர்களுக்கு கீழாக இருந்த அந்த மரித்த விலங்கை போலவே அவர்களும் இருக்கட்டும் என்பதே. சரியான உடன்படிக்கைதானா என்று என்று பார்த்துக்கொள்ள, அவர்கள் மறுபடியும் ஒன்று கூடி வரும் பொழுது அந்த காகிதத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றோடு ஒன்றாக சரியாக எழுத்துக்கு எழுத்து பொருந்த வேண்டும், ஏனென்றால் அவைகள் ஒரே காகிதத்தினுடைய இரண்டு பாகங்களாகும். 42. இப்பொழுது, இதைத்தான் தேவன் நமக்காக கிறிஸ்துவில் செய்தார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு அவருடைய சொந்த குமாரனை கல்வாரிக்கு கொண்டு சென்று மனித வர்க்கத்தோடு உடன்படிக்கையை செய்யும்படி கல்வாரியின் சிலுவையிலே தன் சொந்த குமாரனை கொன்றார். அங்கே அவர் அப்படி செய்த போது, மரணத்திற்கேதுவான பலியாகிய அவரை சிலுவையிலறைந்தார். பரிசுத்த ஆவியை அவரிலிருந்து வெளியே எடுத்தார். "உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்." அவரின் விலாவிலிருந்தும் கரங்கள் மற்றும் கால்களில் இருந்தும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவரிலிருந்து தேவன் அவருடைய ஆவியை வெளியே எடுத்து அவரின் சரீரத்தை கல்லறையில் தள்ளி, மூன்றாம் நாளில் அதை எழுப்பி அவருடைய வலதுபக்கத்திலே உட்காரச் செய்து ஒப்பந்தத்தினுடைய மீதி பாகத்தை சபைக்கு அனுப்பினார். கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியானவரே சபையின் மீது வந்தார். நியாயத்தீர்ப்பு நாளிலே நாம் தப்பித்துக்கொள்வதற்கு இந்த உலகத்தில் இருக்கிற ஒரே ஒரு வழி என்னவென்றால் கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவி, சரீரத்தின் மூலம் அவருடைய மனைவியாக ஒன்றாக பொருந்த வேண்டும். ஆமென். தேவன் சபைக்கு எழுதின உடன்படிக்கை இதுதான் அவர் கிறிஸ்துவின் ஆத்துமாவையும் சரீரத்தையும் இரண்டாக கிழித்தார். அவர் அந்த ஸ்திரியிடம், "நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறக்கூடுமோ?” என்றார். அவள், “கூடும்” என்றாள். அதற்கு அவர், “நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறுவீர்கள்,” என்றார். சரீரத்திலிருந்து ஜீவனை வெளியே எடுக்கும்படியாகவும் பாவ மன்னிப்பிற்காக இரத்தத்தை சிந்தும்படியாகவும் இயேசு கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியானவர் தம்முடைய சரீரத்திலிருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டார். பின்பு தேவன் அவருடைய சரீரத்தை எழுப்பி அவருடைய வலது பாரிசத்தில் அவருடைய சிங்காசனத்தில் உட்கார வைத்து கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியை சபையின் மேல் இரட்டிப்பாய் இருக்கும்படி அனுப்பினார். 43. நண்பர்களே, நீங்கள் பரிசுத்த ஆவியே பெற்றிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஆபிரஹாமினுடைய வித்தாயும் ராஜ்யத்தில் அவரோடு கூட சுதந்திரவாளிகளாயும் இருக்கிறீர்கள். ஆபிரஹாமுக்குள் இருந்த அதே விசுவாசம் இன்றிரவு ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் இருக்கிறது. அல்லேலூயா. இவ்வுலகத்தின் அசிங்கமான கழிவுத் தொட்டியிலிருந்து, தேவன் தம்முடைய ஆச்சரியமான கிருபையினால் உன்னை வெளியே அழைத்து பரிசுத்த ஆவியை உனக்கு கொடுத்தார். நீ அதற்கு தகுதியானவன் என்பதற்காக அல்ல ஆனால் நிபந்தனைகளின்றி அவர் உன்னை அதற்கு அழைத்தார் என்பதற்காக. நீங்கள் நல்லவர்கள் என்பதினால் அல்ல, ஏனென்றால் நீங்கள் நல்லவர்கள் கிடையாது. உங்களுடைய அம்மா இரட்சிக்கப்பட்டார்கள் என்பதற்காக அல்ல. அதெல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் இன்னொரு தனிப்பட்ட நபர். அது சரி. தேவன் உங்களை தெரிந்து கொள்ளுதலினால் அழைத்தார். பாவியான நண்பனே, நீ இங்கே வெதுவெதுப்பான சபை அங்கத்தினனாய் இருப்பாயானால், இந்த இரவின் பொழுதிலே க்கூடாரத்தில் நீ பார்க்கிற இந்த காரியங்கள், இயேசுவின் உயிர்த்தெழுதலை பரிசுத்த ஆவியானவர் ரூபகாரப்படுத்தி காட்டி கொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் மூலமாக தேவன் உரைத்ததும், ஊற்றினதுமான உடன்படிக்கையாய் இது இருக்கிறது. "நான் பிதாவினிடத்திற்கு போகிறபடியால், நான் செய்த அதே கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இவைகளைக் காட்டிலும் அதிகமாய் செய்வீர்கள். இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னை காணாது ஆனால் நீங்களோ என்னை காண்பீர்கள் ஏனென்றால் நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவு பரியந்தமும் இருப்பேன்.” நான் உணர்ச்சிவசப்படவில்லை, நன்றாகவே உணருகிறேன். நான் பக்தி பரவசப்படுகிறேன். ஏன்? பரிசுத்த ஆவி என்பது ‘யூகித்தல்’என்பதாக அல்ல. 'இருக்கலாம்' என்பதாக அல்ல, 'அது ஒருக்கால் வாய்ப்புள்ளது' என்பதாக அல்ல. ‘பரிசுத்த ஆவி இருக்கிறது என்பதை நான் யூகிக்கிறேன்' என்று சொல்வதல்ல. ஆனால் இயேசு கிறிஸ்து இன்று இரவும் ஜீவிக்கிறார் என்றும் அரசாளுகிறார் என்றும் அறிந்திருக்கிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அதே விசுவாசத்தை அவர் இங்கு காண்பாரென்றால், அவர் பூமியின் மேல் இருந்த போது அவர் செய்த அதே காரியத்தை இன்றிரவும் இக்கட்டிடத்தில் அதை செய்யும்படிக்கு அவருடைய பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். ஆமென். நாளை இரவு இதே இடத்தில் நாம் துவங்கலாம். நாம் ஜெபிக்கலாமா? 44. எங்கள் பரலோக பிதாவே, இயேசுவுக்காக நாங்கள் உமக்கு நன்றி சொல்லுகிறோம் ஓ, அந்த நிபந்தனை இல்லாத உடன்படிக்கை. தேவனுக்கு அந்நியனாயும், தேவனுடைய அரசாட்சியை விட்டு புறம்பாயும் ஒரு பாவியாய் பிறந்தேன். தேவனுடைய ஆச்சரியமான கிருபையினாலும் முன் தெரிந்து கொள்ளுதலினாலும் பரிதபிக்கப்படக்கூடிய என்னுடைய சிறிய ஐரிஸ் இருதயத்தோடு ஒரு நாளிலே பேசி அழைத்தீர். ஓ, அதை நான் கேட்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன், கர்த்தாவே. நாம் இப்பொழுது இருக்கிற இந்த இழிவுற்குரிய சரீரம் ஒரு நாளிலே மரணத்தினாலே பாழாக்கப்படும் என்பதை அறிந்தவனாக அதை (அழைப்பை) எல்லாவற்றுக்கும் மேலாக நான் மதித்து நேசிக்கிறேன். இந்த சரீரத்தினுடைய எல்லாவிதமான குணாலட்சணங்களும், புத்திக்கூர்மையும் உடைந்து இந்த மூளையின் அணுக்களோடு சேர்ந்து அழிந்து போகும். ஆனால் அந்த சரீரத்திற்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் ஜீவிக்கிறார். அந்த பரிசுத்த ஆவியானவர் ஒரு நாள் மறுபடியும் உயிர்த்தெழுந்த சரீரத்தை கொண்டு வருவார். உயிர்த்தெழுந்த அந்த சரீரத்திற்கு நாம் இருக்கிற இந்த சரீரம் நகலாயிருக்கிறது. உயிர்ப்பிக்கப்பட்ட சரீரம் பெலமாகவும், ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். வியாதி பட்டவர்களையும் துன்பப்படுகிறவர்களையும் நீர் சுகமாக்குவதை பார்ப்பதன் மூலம் இன்றைக்கு உயிர்த்தெழுதலின் அச்சாரத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம். நீர் இன்னும் இயேசுவாகவே இருக்கிறீர் என்பதை ஒரு துளி கூட சந்தேகமில்லாமல் நிரூபித்துக் கொண்டு உம்முடைய பரிசுத்த ஆவியானவர் இங்கு இருக்கிறார். தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரிந்து பேசிக்கொண்டும் ஜனங்களுடைய பலவீனங்களை சுகமாக்கிக்கொண்டும் தேவனுக்கு முன்பாக இரத்தத்துடன் தினமும் சென்று, 'நான் இந்த நோக்கத்திற்காகவே மரித்தேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிற பிரதான ஆசாரியராக அவரை வலது பாரிசத்தில் உட்கார வைத்திருக்கிறார். அவர் மேல் இருந்த பரிசுத்த ஆவியானவர் அர்ப்பணிக்கப்பட்ட இருதயங்களின் மூலம் அதே காரியங்களை செய்து கொண்டு பூமியின் மேல் இப்பொழுது இங்கே இருக்கிறார். தேவனே, எல்லா கேள்விகளும் போய்விட்டன. ஆபிரஹாம் எழுந்து தேவனை விசுவாசித்தான். பிதாவே, இப்பொழுது இங்கே யாராவது நீர் இல்லாமல் அந்நியர்களாக, இருப்பார்களென்றால், இந்த இராத்திரி வேளையில் அவர்கள் எழுந்து தேவனை விசுவாசித்து, "இதோடு முடிந்தது. இந்த எல்லா பிரச்சினைக்கும் முடிவு வந்திருக்கிறது. நான் வேதாகமத்தை பார்த்தேன், அது வாசிக்கப்படுவதை கேட்டேன். நான் அதை கவனித்து பார்த்தேன். அதை பரிசுத்த ஆவியானவர் உறுதி செய்து இருக்கிறார். இப்பொழுது நான் ஒரு விசுவாசி. இக்கணப்பொழுதிலிருந்து எல்லா பாவத்தையும் நான் விட்டு விடுகிறேன். நான் கிறிஸ்துவை மாத்திரம் பற்றிக் கொள்கிறேன். அவருடைய கிருபையினாலும் உதவியினாலும் நான் இதைச்செய்வேன்,” என்று சொல்வார்களாக. 45. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தி இருக்கையில், “தேவனே, இது என்னுடைய கரம். இன்றிரவு நான் ஒரு விசுவாசி. இன்றிரவு முதற்கொண்டு மீதமுள்ள என் வாழ்நாளெல்லாம் உம்மையே சேவிப்பதற்கு நான் வாக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுகிற யாராகிலும் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களானால், அவர் அதைப் பார்ப்பார். எழுந்து நின்று கர்த்தராகிய இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்காக சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபை ஜெபித்துக் கொண்டிருக்கையில், வேறு யாராவது ஒருவர், நீங்கள் எழுந்து நிற்பீர்களா ? அது ஒரு நல்ல காரியம். நீங்கள் ஏற்றுக் கொண்ட விதானம் எனக்கு பிடித்திருக்கிறது. எழுந்து நில்லுங்கள். கர்த்தராகிய இயேசுவை உங்களுடைய சொந்த இரட்சகராக நீங்கள் இப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை தேவன் பார்க்கட்டும். “என் வார்த்தையைக் கேட்டு (என்னுடைய சபையை சேர்ந்து கொள்கிறவன்” என்று அல்ல), ஆனால்“என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு (நித்தியஜீவன் எதிர்காலத்தில் இருக்குமா? இல்லை) சரியாக இப்பொழுதே நித்திய ஜீவன் உண்டு. (அறிவுப்பூர்வமான பார்வையினால் அல்ல இருதயத்திலிருந்து விசுவாசிக்கிறவனுக்கு) நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைக்கு உட்படாமல் மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்.” நீங்கள் விசுவாசிப்பீர்களா? கலிபோர்னியாவுக்கு இது என்னுடைய கடைசி பயணமாக இருக்கலாம் என்பதை அறிந்தவனாய் ஒரு கிறிஸ்தவ சகோதரனாய் உங்களை சம்மதிக்க வைக்க நான் முயற்சிக்கிறேன். அயல்நாட்டு ஊழியங்களுக்காக எனக்கு துரித அழைப்புகள் இருக்கின்றன. அங்கே எங்களுக்கு ஆயிரக் கணக்கானோர் ஒரே வாரத்தில் இரட்சிக்கப்படுகிறார்கள். ஒருவேளை கலிபோர்னியாவிலே ஒரு இரவில் அல்லது தேசத்தினுடைய மற்ற பாகங்களில் நான்கு ஐந்து பேர் இரட்சிக்கப்படலாம். நம்முடைய நேரமானது கிட்டத்தட்ட முடிந்தது என்று நான் நம்புகிறேன். சுவற்றில் கையெழுத்தானது எழுதப்பட்டு இருக்கிறது. ஜனங்கள் சற்று அலட்சியமாக இருக்கிறார்கள். கிறிஸ்து இல்லாமல் நீங்கள் இங்கே இருப்பீர்களானால் ஒரு நிமிடம் எழுந்து நிற்பீர்களா? ஒருவேளை நீங்கள் எல்லாரும் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாக இருக்கலாம். அப்படித்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். 46. இப்பொழுது, பரலோக பிதாவே, எழுந்து நின்றவர்களுக்கும், தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்களுக்காகவும், நீர் அவர்களுடைய ஆவிகளை இன்றிரவு சுகமாக்கும் படியாய் நான் தாழ்மையாக ஜெபிக்கிறேன். அதை அருளும். உண்மையான விசுவாசம் உள்ளே வருவதாக. சந்தேகங்கள் இனி வேண்டாம். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினாலே அதைக் கழுவும். அவர்களை உம்முடைய அன்பின் ஊழியக்காரர்களாக மாற்றும். தயவு செய்து, பிதாவே. மேலும், எழுந்து நிற்காதவர்களையும் எழுந்து நிற்பதற்கு போதுமான தைரியம் தங்களுக்கு இருந்திருந்தால் நலமாய் இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்காகவும் நான் தாழ்மையாக ஜெபிக்கிறேன். தேவனே, நோவா வருவதற்கு முன்பாக இருந்தது போல, ஒரு மகத்தான விஞ்ஞானத்தின் நாளில், கட்டிடங்களை கட்டுகிற மகத்தான நாளில் பொருட்களை எல்லாம் செய்கிற நாட்களில், படிப்பறிவு பெருத்த ஒரு நாளில் நாங்கள் ஒரு மோசமான நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நோவாவின் நாட்களில் நடந்தது போல நீர் வருவதற்கு முன்பு அப்படியே நடக்கும் என்று நீர் சொன்னீர். நாங்கள் இங்கு இருக்கிறோம். நோவாவின் நாட்களிலே ஒரு செய்தி இருந்தது. இன்றைக்கும் ஜனங்களை சிலுவைக்கு அழைத்துக் கொண்டிருக்கிற உம்முடைய செய்தி இருக்கிறது. இன்றிரவு வியாதியஸ்தர்களை சுகமாக்கும் பிதாவே. இந்தக் காரியங்களை எல்லாம் இயேசுவின் நாமத்தில் உம்முடைய கரத்தில் அர்ப்பணிக்கிறோம், ஆமென். சில வியாதியஸ்தர்களை மேலே வரும்படி அழைப்பு விடுக்கையில், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பராக. இப்பொழுது, பத்து நிமிடங்கள் மாத்திரமே இருக்கிறது, ஆனால், அதை காட்டிலும் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்வோம். பார்க்கலாம். 47. நீங்கள் ஜெப அட்டைகளை கொடுத்தீர்களா.....? இன்னும F-வரிசையில் இருக்கிறோமா? இன்னும் F-வரிசையில் ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஜெப அட்டைகள்-F இப்பொழுது, இந்த ஜெப அட்டைகளை, இதைப் பெற்றுக்கொள்ளும் பொழுது.... நீங்கள்.... ஒவ்வொரு நாளும் புதிய அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜெப அட்டைகளை பெறும்போது, இங்கு வந்து நீங்கள் அவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ஜெப அட்டையை வாங்கி செய்தியையே கேட்டிராத ஒருவருக்கு அதை கொண்டுபோய் நீங்கள் கொடுக்க முடியாது அல்லது எப்படி... அதை செய்யாதீர்கள். காரணம். நீங்கள் தடுத்து நிறுத்தப்படுவீர்கள்.... நீங்கள் வந்து உங்களுடைய சொந்த ஜெப அட்டையை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டு அதன் பின்பு வாருங்கள். இப்பொழுது, என்னவென்று பார்க்கலாம்.... அழைப்போம்..... துரிதமாக 80, 85-ல் இருந்து அழைப்போம். 85-லிருந்து அழைக்கலாம். F-85 ஜெப அட்டையை வைத்திருப்பவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள், துரிதமாக. நான் சரியான ஜெப அட்டைஎண்ணை அழைக்கிறேனா என்று பார்க்கும்படி ஜெப அட்டை எண் F-85, உங்கள் கரங்களை உயர்த்துங்கள், சரி..... இங்கே இந்த பக்கமாக.... சரி 86,87,88,89,90..... 100 வரை உள்ளவர்கள் எழுந்து இந்த பக்கமாக நில்லுங்கள். நீங்கள் விரும்பினால், இந்த பக்கமாக நில்லுங்கள். முடிந்தால், வரிசையை துரிதமாக ஏற்படுத்துங்கள். நீங்கள் அனைவரும் உங்களைச் சுற்றிப் பாருங்கள், உங்கள் அருகில் யாரகிலும் இருந்தால், அவர்களுடைய ஜெப அட்டையைப் பாருங்கள். ஒருவேளை ஒருவேளை அவர்கள் ஜெப அட்டையைப் பெற்று இருக்கலாம், அல்லது பெறாமல் இருக்கலாம். அவர்களுக்கு ஒருவேளை அறிவிப்பு கேட்காமலோ அல்லது அவர்கள் அப்படி செய்யாமல் இருக்கலாம். அவர்களால் எழுந்திருக்க முடியாமல் கூட இருக்கலாம்.. இப்பொழுது, அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவரல்லவா? எங்களுக்கு அந்த ஸ்வரத்தை இசைப்பீர்களானால், “மகத்தான வைத்தியர்” என்ற பாடலை நாம் பாடலாம். 48. வியாதியுள்ளோரும் தேவையுள்ளோரும் இருந்த அந்த வழியாக நசரேயனாகிய இயேசு வந்து கொண்டிருந்தார். தேவன் இயேசுவோடு பேசி ஜனக்கூட்டத்தில் விசுவாசிக்கிற மக்களை அவருக்கு காண்பித்தார். அவர் அவர்களிடம் திரும்பி “உன் விசுவாசம் உன் உதிரப்போக்கில் இருந்து உன்னை சுகப்படுத்தினது, நீ யார் என்றும் நீ இன்ன இடத்திலிருந்து வருகிறாய் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறினார். “ஆம்” “நீர் என்னை எப்படி அறிவீர்?” “நீ அந்த மரத்தின் கீழ் இருக்கும் பொழுது, நான் உன்னை பார்த்தேன்” அவர், "நீ அங்குள்ள ஆற்றுக்கு போய் உன்னுடைய தூண்டிலை போட்டு, முதலாவது மீனைப் பிடி. அதின் வாயில் உள்ள வெள்ளிப்பணத்தை எடுத்து வரியையும் தசமபாகத்தையும் செலுத்து” என்றார். ஓ, அவர் இப்பொழுதும் இயேசுவாய் இருக்கிறார். அப்படித்தானே? எல்லாம் சரி, இப்பொழுது, அவர்கள் இப்பொழுது, அவர்கள் அவர்களை ஒன்றாக வரிசையில் நிற்கசெய்கிற வேளையிலே, “அந்த மகத்தான வைத்தியர்”என்ற பாடலில் ஒரு கவியை நாம் பாடலாம் அந்த மகத்தான வைத்தியர் அருகில் உள்ளார், அந்த மனதுருகும் இயேசு: அவர் பேசுகிறார்...(என்ன சொல்லுகிறார்) (ஒரு மனிதன், 87-என கூறுகிறார்,) 87... 87-வது எண்ணுள்ள அட்டையை காணவில்லை. யாராவது ஜெப அட்டை 87 வைத்திருப்பீர்களானால். ஒருவேளை அவர்களால் எழுந்திருக்க முடியாத யாராவது ஒருவராய் இருக்கலாம். பாருங்கள். அங்கே அமர்ந்திருக்கும் அந்த ஸ்திரியை யாராவது பாருங்கள். எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த ஸ்திரி எழுந்திரிக்க முடியவில்லை போல் தோன்றுகிறது. அவள் ஜெப அட்டையை வைத்திருக்கிறாளா என்று பாருங்கள். பரவாயில்லை. உங்கள் பக்கத்திலிருக்கிறவர்களை பாருங்கள். F-87 ஜெப அட்டை வைத்திருக்கிற யாராவது இருப்பீர்களானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், F-87? சுற்றிலும் தேடிப் பாருங்கள். சரி. 49. இப்பொழுது, நீங்கள் இங்கே இருந்து அவர்கள் இல்லாமல்......நல்லது, நாளை இரவு நீங்கள் பார்க்க மாட்டீர்கள், ஜெப வரிசையில் வருவதற்கான வாய்ப்பு இன்று இரவு தான் உங்களுக்கு இருந்தது, இன்றிரவு உங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்குமானால், மறுபடியும் நாளை இரவு ஜெப அட்டையைக் கேட்கக்கூடாது, வருகிறவர்கள், இப்பொழுதே சீக்கிரமாக உள்ளே வாருங்கள். சரி. பையன்கள் தேடுகிற வேளையில், நாம் ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுப்போம், நீங்கள் அப்படி செய்வீர்களா? பரலோகப்பிதாவே, இப்பொழுது, நாங்கள், ஊழியம் செய்யும் சகோதரர்களாக, ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யும்படி இங்கிருக்கிறோம். அன்பான தேவனே, உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட இரக்கம் ஒவ்வொருவர் மேலும் வந்து அமரும்படி நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். அன்பான தேவனே, இன்றிரவு வியாதியாயுள்ள உம்முடைய பிள்ளைகளுக்கு ஜெபிக்க எனக்கு உதவி செய்யும். இதை அருளும். வியாதியுள்ள ஒவ்வொருவரும் உம்முடைய தெய்வீக பிரசன்னத்தில் சுகமாக்கப்படுவார்களாக. இதை அருளும் கர்த்தாவே, அவருடைய நோக்கத்துக்காக இதை இயேசுவின் இனிய நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். சரி. 50. இப்பொழுது, நான் உங்களிடத்தில் ஒன்றை கேட்கப்போகின்றேன். சகோதரனே, நீங்கள் கவனியுங்கள். என்னை நீண்ட நேரம் நிற்க விடாதீர்கள். நீங்கள் துரிதமாக வீட்டுக்குப் போக வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது நாம் கூட்டத்தை துவங்கலாம். யாருமே பதில் அளிக்கவில்லை. பரவாயில்லை. பரவாயில்லை. ஒருவேளை அவர்கள் வெளியே சென்றிருக்கலாம். ஒருவேளை அந்த அட்டை வைத்திருப்பவர் உள்ளே வருவார்களானால் யாரோ ஒரு வாயில்காப்போன் அவர்களைப் பார்த்து, அவர்களை நம்முடைய வரிசையில் நிற்கும்படி அனுமதிப்போம், ஏனென்றால் அவர்கள் வரிசையில் வருவதற்கான தகுதி உண்டு. அது சரி. இப்பொழுது நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். நான் யாரையும் அறியாதவனாய் இருக்கிறேன். எனக்கு தெரிந்தவரையில் இந்த கட்டிடத்தில் சரியாக இப்பொழுது எனக்கு முன்பாக இருக்கிற மனிதனும் என்னோடு கூட இருக்கிற ஒரு குழுவும் அந்த இரண்டு பையன்களும் மாத்திரமே எனக்கு தெரியும். என்னுடைய மனைவி இங்கே எங்கேயோ இருக்கிறாள். ஆனால் இன்று இரவு நான் இன்னும் அவளைப் பார்க்கவில்லை. ஆனால் அவள் இங்கே எங்கேயோ இருக்கிறாள். என்னுடைய சிறிய மகளும் என்னுடைய மகனும் அவ்வளவுதான். ஆனால் தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? இப்பொழுது உங்களால் விசுவாசிக்க கூடுமானால்.... விசுவாசத்தை உடையவர்களாயிருங்கள். இங்கு இருக்கிற எத்தனை பேர் ஒரு ஜெப அட்டையும் இல்லாமல் சுகமாக்கப்பட விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். உங்களிடத்தில் ஜெப அட்டை இல்லாததினால் நீங்கள் இங்கே மேடைக்கு வரமுடியாது. நீங்கள் எங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள் என நான் பொதுவாய் அறிந்து கொள்வேன். சரி, அது நல்லது. பார்த்தால் எல்லா இடங்களிலும் கரங்கள் உயர்ந்திருக்கிறது. இப்பொழுது இங்கு இருக்கிற இந்த நபர், இந்த பெண், இந்த வாலிப பெண், எனக்கு முற்றிலுமாக ஒரு அந்நிய நபராக இருக்கிறார். நான் இவளை பார்த்ததே கிடையாது. ஆனால் தேவன் இவளை அறிவார். தேவனுக்கு அவளைக் குறித்து எல்லாம் தெரியும். இப்பொழுது நான் உங்களை சுகமாக்க முடியுமானால், இவள் வியாதியாய் இருந்தால்.... அவள் வியாதியாய் இருக்கிறாளா என்று எனக்கு தெரியாது ஆனால் என்னால் சுகமாக்க முடிந்து, ஆனால் அதை செய்யாமல் இருப்பேனென்றால், நான் ஒரு கொடூர மனிதனாய் இருப்பேன். ஆனால் என்னால் சுகமாக்க முடியாது. நான் நிற்கிற இதே இடத்தில் இயேசுவானவர் நின்று கொண்டிருந்தால், அவராலும் வளை சுகமாக்க முடியாது. அவர் ஏற்கனவே அதை செய்திருக்கிறார். அவர் இவளை விசுவாசிக்க செய்ய முயற்சிக்கக்கூடும் ஆனால்....அது சரியா? அது சரி பாருங்கள். இரத்தமானது ஏற்கனவே சிந்தப்பட்டிருக்கிறது. பாவ நிவாரணமானது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தனக்கெதிராக கிரியை செய்ய முடியாது. பாருங்கள். அவரால் அதை செய்ய முடியாது. அவர் ஏற்கனவே அதை செய்து முடித்த பிறகு, நீங்கள் அதை மறுபடியும் செய்ய முடியாது. ஒரு திட்டத்தை நிறைவேற்ற தேவையான வழிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார். “சுகமளித்தலை சாத்தியமாக்கும் படி நான் என் இரத்தத்தை சிந்தியிருக்கிறேன்.' இப்பொழுது உங்களால் விசுவாசிக்க கூடுமானால், அவ்வளவுதான். செய்யப்படவேண்டியதெல்லாம் அவ்வளவுதான். அவர்கள் புரிந்துகொண்டு விசுவாசிக்கும்படி அவர் பிரசங்கிகளையும், தீர்க்கதரிசிகளையும் வெவ்வேறான நபர்களை அனுப்பி தம்முடைய மகிமைக்காக அவர்களை சபையில் பொருத்துகிறார். 51. இப்பொழுது இந்த சிறுபெண், நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள், அப்படித்தானே ஸ்திரியே? என் வாழ்நாளிலே ஒருபோதும் உன்னை நான் பார்த்ததேயில்லை, நான் இல்லை..... நீயும் என்னை பார்த்ததேயில்லை. அது சரி. கர்த்தராகிய இயேசு இந்த ஸ்திரி எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பதை மாத்திரம் அவர் எனக்கு வெளிப்படுத்து வாரானால் மீதியாய் இருக்கிற நீங்கள் எல்லோரும் உங்கள் முழு இருதயத்தோடு அவரை விசுவாசிப்பீர்களா, அதுதான்..... நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், இயேசு தாமே சொன்னார்..... இந்த இரவுகளில்.... ஒரு புதிய நபர் இருப்பாரென்றால்... இயேசு சொன்னவிதமாக மிகச் சரியாக இருந்தது. “முதலாவது பிதாவானவர் எதை காண்பிக்கிறாரோ அதேயேயன்றி நானாக எதையும் செய்வதில்லை என்று மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்”. அது சரிதானே?. "தாமாக ஒன்றும் செய்ய முடியாது. பிதாவானவர் எதை காண்பிக்கிறாரோ அதையே நான் செய்கிறேன்” அவர் கடந்து செல்லும்போது, அவர், "இப்பொழுது நான் செய்த கிரியைகளை, நீங்களும் செய்வீர்கள். உலகத்தின் முடிவு பரியந்தமும் நான் உங்களோடு இருப்பேன். உலகத்தின் முடிவு பரியந்தம் நான் செய்த அதே கிரியைகளை நீங்கள் செய்வீர்கள்,” என்று கூறினார். அப்படியானால் அது அவர்தான். அவர்.... வேதாகமம்,“அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்,” என்று கூறுகிறது. அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருந்து, அதே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பாரானால், அவர் அதே காரியங்களை செய்தாக வேண்டும், அப்படித்தானே? உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியபடி, அவருடைய வார்த்தையை கேட்டு, அவரை விசுவாசித்து, அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இங்கே அவர் அதே காரியத்தை செய்த பிறகு, அதைக் குறித்து இங்கே எந்த யூகமும் கிடையாது. இவை யாவும் உண்மை, அப்படித்தானே? 52. இப்பொழுது, இந்த வாலிப ஸ்திரி, நேற்றிரவு போல இன்று இரவும் கூட ஜெப வரிசையை ஒரு ஸ்திரியினிடத்திலிருந்து தொடங்குகிறோம். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். இப்பொழுது சகோதரியே, அது உண்மை என்று உங்களுக்கு தெரியும். நாம் முன்பின் அறியாதவர்களாக இருக்கிறோம். ஆனால் இப்பொழுது, நீங்கள் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எனக்கு தெரியாது. நீங்கள் வெறுமனே பலபீடத்திற்கு நேராக நடந்து வந்த ஒரு வாலிபஸ்திரியாய் இருக்கிறீர்கள். அது மட்டும் தான் எனக்கு தெரியும். நீங்கள் இங்கு பலிபீடத்திற்கு ஏறி வரவேண்டுமென்கிற அவசியம் இல்லை. நீங்கள் அங்கு கீழே அமர்ந்து கொண்டு விசுவாசத்தை உடையவர்களாக இருக்கலாம். ஆனால், இங்கே மேலே வந்ததன் மூலமாக, நான் உங்களோடு பேசக்கூடிய அளவிற்கு எனக்கு மிக அருகில் நிற்கிறீர்கள். நான் மாத்திரம் உங்களை விசுவாசிக்க செய்யக் கூடுமானால், பிறகு உங்கள் சொந்த விசுவாசமே உங்களுக்காக ஒரு தரிசனத்தை கிரியை செய்ய வைக்கும். புரிகிறதா? அது, தேவன் உங்களை நேசிக்கிறார் என்பதை அவர் உங்களுக்கு காண்பித்தலே ஆகும். அது நான் அல்ல. உங்களை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அவர் அறிவார். நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், பிறகு ஒன்றும் செய்ய முடியாது. விசுவாசியாமால் முழு இரவும் நீங்கள் இங்கு நின்று கொண்டிருக்கலாம், ஏன், அது கிரியை செய்யாது. புரிகிறதா? ஏனென்றால் தரிசனத்தை கொண்டு வருவது என்னுடைய விசுவாசம் அல்ல, நீங்கள் கொண்டிருக்கிற விசுவாசமே. அது உங்களுடையது. தேவனுடைய வரமாய் இருக்கிறது. நான் அந்த வரமல்ல. நான் வெறுமனே, அந்த வரம் கிரியை செய்யக்கூடிய ஒரு வாய்க்காலாய் மாத்திரம் இருக்கிறேன் புரிகிறதா? அந்த பல்பு (bulb) வெளிச்சம் கிடையாது (That bulb is not the light). அந்த மின் கம்பி வெளிச்சம் கிடையாது. அது, மின் கம்பிகளில் ஓடக்கூடிய மின்னோட்டமே அந்தவெளிச்சத்தைத் தருகிறது. அந்த மின் கம்பி வெறுமனே மின்னோட்டத்தை எடுத்து செல்லக்கூடிய ஒரு கடத்தியாய் மாத்திரம் இருக்கிறது. இந்த காரியத்தில், நான் அந்தக் கடத்தியாய் இருக்கிறேன் புரிகிறதா? அது அவருடைய, யாரோ ஒருவர் பட்டனை அழுத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அந்த பட்டனை அழுத்த வேண்டிய நபர் நீங்கள்தான்.தேவன் வெளிச்சத்தை காண்பித்து... (God shows the light and snaps it off) பிறகு அது சரியா தவறா என்பதை நீங்கள் அறிவீர்கள். 53. இப்பொழுது, நாம் பேசுகையில், நிச்சயமாகவே உங்களுடைய ஆவியை தொடர்பு கொள்வதற்கே இப்படி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அது சரி. அவர் அருகில் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அருகில் இருக்கிறார். ஏதோ ஒன்று அருகில் உள்ளது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். உங்களைப் போலவே நானும் ஏதோ ஒன்று அருகில் உள்ளதை உணர்கிறேன். ஆனால் இன்னும் அது நம்மை அபிஷேகித்து நிரப்பவேண்டிய அளவுக்கு நிரப்பாமல் இருக்கிறது. ஆனால் அவள் என்னுடைய கண்களிலிருந்து மறையத் துவங்குகையில் இப்பொழுது நான் அந்த ஸ்திரியை பார்க்கிறேன். நரம்பு தளர்ச்சியால் அவள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறாள். அவள் நிலைகுலைந்தவளாய் இருக்கிறாள். அவள் கொஞ்ச காலமாக நரம்பு தளர்ச்சியினால் அவதிப்பட்டு, நிலைகுலைந்தவளாய் இருக்கிறாள். ஸ்திரீகளுக்குள்ள பிரச்சனையும் அவளுக்கு இருக்கிறது. அது அவளுடைய கர்ப்பப்பையில் இருக்கிறது. அவளுக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருக்கிறது. இந்த காரியங்கள் எல்லாம் உண்மை. அப்படித்தானே, ஸ்திரியே? நான்... நீங்கள் இந்த நகரத்திலிருந்து வரவில்லை. நீங்கள் ஏதோ வேறொரு நகரத்திலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் அப்படியாக நகர்ந்து இந்த வழியாக வருகிறதை நான் பார்க்கிறேன். யாரோ ஒருவர் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்லி இருந்தார். இந்தக் கூட்டத்தைப் பற்றி யாரோ ஒருவர் சொல்லியிருந்தார். பிறகு நீங்கள் ஜெபிக்கப்படும்படி இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் புறப்பட்டு வந்த உங்களுடைய வீதியினுடைய என்ணை நான் பார்கிறேன். உங்களுடைய வீதியினுடைய எண் 8614. யாரோ ஒருவர் உங்களை பெட்டி (Betty) என்று கூப்பிடுகிறார். உங்களுடைய கடை பெயர் மூர் (Moore). அது சரியே. இப்பொழுது, நீங்கள் உங்கள் வீட்டிற்கு போகலாம். நீங்கள் சுகமாக்கபட்டீர்கள். உங்களுடைய விசுவாசம் அதைச் செய்தது, சகோதரியே. என் சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனில் விசுவாசமுள்ளவர்களாக இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நம்முடைய கர்த்தர்.. நாம் ஆபிரஹாமின் வித்தாய் இருக்கிறோம். இயேசு கிறிஸ்து ஆபிராஹாமின் வித்தாயிருந்தார். நம்முடைய தேவன்.....தேவன் நம்மை உண்டாக்கி இருக்கிறார். விசுவாசம் உள்ளவர்களாய் இருங்கள். சந்தேகிக்காதீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். பிறகு நீங்கள் கேட்டதைப்பெற்றுக் கொள்வீர்கள். அது எல்லாம் சரி. அவள் அதிலிருந்து வெளியே வந்துகொண்டு இருக்கிறாள். அவள் நீண்ட நேரம் அந்த அபிஷேகத்தின் கீழ் இருந்தாள். அதுவே தான், அவள் அந்த அபிஷேகத்தின் கீழேதான் இருந்தாள். அவள் முழுவதுமாக சுய நினைவை இழந்துவிட்டாள். அவ்வளவுதான். அது சரி. இப்பொழுது, அவள் நலமாய் இருக்கிறாள். பாருங்கள். அவள் நன்றாக இருக்கிறாள். அவள் சற்று சோர்வடைந்து விட்டாள். 54. இப்பொழுது, இங்கு நின்று கொண்டிருக்கிற நபர், ஐயா, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். நாம் ஒருவரை ஒருவர் தெரியாதவர்களாக இருக்கிறோம். தேவன் மாத்திரமே நம் இருவரையும் அறிவார். அது சரிதானே, ஐயா? மேலங்கியை அணிந்திருக்கிற ஐயா உங்களைதான், நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதனால் அங்கே அழுது கொண்டிருந்தீர்கள். இருதய பிரச்சனை உங்களை தொல்லை செய்து கொண்டிருக்கிறது. ப்பொழுது, அது போய் விட்டது. விசுவாசத்தை உடையவர்களாய் மாத்திரம் இருங்கள். அது நல்லது. அங்கே உங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருகிற ஸ்திரியும் கூட நுரையீரல் பிரச்சனையினால் அவதிப்படுகிறாள். அது சரி. அப்படித்தானே, ஸ்திரீயே? இப்பொழுது சற்று உங்கள் கரத்தை உயர்த்துங்கள், சகோதரியே. ஐயா, உங்களுடைய கரத்தை அந்த ஸ்திரியின் மீது வையுங்கள். அவ்வளவுதான். பரலோகப்பிதாவே, பரிசுத்த ஆவியின் வல்லமையை எடுத்து ஒரு தரிசனத்தை கொண்டு வரும் அளவிற்கு அவர்களுடைய விசுவாசமானது அவ்வளவு அருகாமையில் இருக்கிறது. அவர்கள் இருவரும் சுகம் பெரும் அளவிற்கு அவர்களுடைய விசுவாசம் போதுமான அளவு பலமுள்ளதா யிருக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள், ஐயா? அவர் அருமையானவரல்லவா? நிச்சயமாகவே, அவர் அருமையானவர். நீங்கள் தொடர்ந்து அந்தப் பக்கமாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், நீங்கள் யாரோ ஒருவரை பற்றி அக்கறை கொண்டுள்ளீர்கள். அப்படித்தானே? அது உங்களுடைய மனைவி. அது சரி. உங்களுக்கு தொண்டையில் பிரச்சனை இருக்கிறது. ம்-ம். நீங்கள் இங்கு தங்குவதற்கு இது கடைசி இரவாயிருக்கிறது. அப்படித்தானே? நீங்கள் உங்கள் வீட்டிற்கு போயாக வேண்டும். நீங்கள் சுகம் பெற போகிறீர்கள். நீங்கள் விட்டுவிட வேண்டுமென்றிருக்கிற ஒரு பழக்கமும் உங்களுக்கு இருக்கிறது. அதை நீங்கள் விட்டுவிட போகிறீர்களா? அதை தூக்கி எறிந்து போடுங்கள் அந்த பழக்கத்தை மறுபடியும் கையில் எடுக்காதீர்கள். போய், மீதமுள்ள நாட்களில் கர்த்தரை சேவியுங்கள். அங்கிருக்கிற உங்கள் மனைவியின் மீது உங்கள் கரத்தை வையுங்கள். அவளும் சுகமடையப் போகிறாள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இ யேசு கிறிஸ்துவின் நாமத்தில் களிகூர்ந்து கொண்டே உங்களுடைய பாதையில் செல்லுங்கள். ஆமென். நித்திய ஜீவனின் காரணரும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சிருஷ்டிகராகிய தேவாதி தேவனுக்கே நன்றி உண்டாவதாக என்று சொல்வோமாக. 55. அருகில் வாருங்கள், சகோதரியே, விசுவாசியுங்கள். உங்களால் விசுவாசிக்க கூடுமானால் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். பாக்கெட் புத்தகத்தின் மீது கரத்தை வைத்திருக்கிற ஸ்திரியே, உங்கள் பக்கவாட்டில் (side) ஏதோ ஒரு தொல்லையை கொண்டவர்களாக இருந்து வருகிறீர்கள். அதுதான். அங்கு உட்கார்ந்திருக்கிற உங்களை தான். ஆம், அது சரி. இப்பொழுது, அந்தப் பிரச்சனை போய் விட்டது. உங்களுடைய விசுவாசம் உங்களை சுகமாக்கியிருக்கிறது. ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் அருமையானவர், அவர் அருமையானவரல்லவா? மற்றொரு ஸ்திரி அங்கே தன்னுடைய கரத்தில் பாக்கெட் புத்தகத்தை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், அவளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. இருந்தாலும், கர்த்தராகிய இயேசு உங்களை சுகமாக்க முடியும். அப்படித்தானே, சகோதரியே? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிகிறீர்களா? சரி. நீங்கள் சுகமாக்கப்பட முடியும். அது அருமையானது, அப்படித்தானே? திரும்பி என்னை பார்த்துக் கொண்டிருக்கிற நீங்கள் உங்கள் கண்களிலுள்ள பிரச்சனையினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள், அப்படித்தானே, ஐயா? ஆம். ஆம், நிச்சயமாகவே, உங்களுடைய கண்களிலுள்ள பிரச்சனையினால் நீங்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பக்கத்தில் உள்ள மனிதருக்கும் அதே பிரச்சனை தான். சரி. நீங்கள் இருவரும் எழுந்து நின்று, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் உங்களுடைய பார்வையை பெற்றுக் கொள்ளுங்கள், குணமடைவீர்களாக. நீங்கள் விசுவாசத்தை கொண்டுள்ளீர்களா? "நீங்கள் விசுவாசித்தால்." அது உங்களைப் பொறுத்தேயுள்ளது. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, சகோதரியே? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் மிகவும் வியாதியுற்ற சகோதரி. நீங்கள் மிகவும் வியாதியாய் இருப்பதற்கு ஒரு காரணம், உங்களுக்கு இருதயத்தில் பிரச்சனை இருக்கிறது. மேலும், உங்களுக்கு தொண்டையில் பிரச்சினை இருக்கிறது. சைனஸ் பிரச்சினை, அது போன்ற ஏதோ ஒரு வியாதியினால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள். இந்த அநேக வியாதிகளுக்கு காரணம் உங்களுடைய வயது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், தேவன் உங்களுக்காக இருக்கிறார். நீங்கள் அறிந்து கொள்ளும் படி ஒரு காரியத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள் மிகவும் அக்கறை கொள்ளக்கூடிய யாரோ ஒருவர் இருக்கிறார். அப்படித்தானே? அவர்கள் ஒன்பது வருடமாக படுக்கையில் இருந்து வருகிறார்கள். அது பக்கவாதம் அல்லது ஏதோ ஒன்றாய் இருக்கிறது. அது சரியில்லையா? இப்பொழுது, முழு மனதோடும் விசுவாசித்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் அதை உறுதிப்படுத்துவார். தேவனுக்கு நன்றி உண்டாவதாக என்று நாம் சொல்வோமாக. நீங்கள் விசுவாசித்தால்... எப்படி இருக்கிறீர்கள், சகோதரியே? நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? ஓ, மிகவும் நல்லது. நான் உங்களுக்கு ஒரு அந்நியனாய் இருக்கிறேன். உங்களுக்கு என்னை தெரியாது. எனக்கும் உங்களை தெரியாது. உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தைக்காக தான் நீங்கள் அக்கறை கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். ஏதோ ஒன்றை இயேசு என்னை அறிய செய்வாரானால், எதற்காக நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்று அறியச் செய்வாரானால், உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? சகோதரியே, உங்களுடைய குழந்தை மிகவும் வியாதியாய் இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று உண்மையாகவே அவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அந்த குழந்தையினுடைய கழுத்தில் அந்த பிரச்சனை இருக்கிறது. அது சுரப்பியில் ஏற்பட்ட பிரச்சனை, வீக்கமாய் இருக்கிறது. அது சரியே. நேற்று அந்த குழந்தையை மருத்துவமனைக்கு மருத்துவரிடத்திற்கு எடுத்துச் செல்ல இருந்தீர்கள். ஆனால், நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. அது ஒரு பாவிக்காக கொண்டிருக்கிற மிக நல்ல விசுவாசமாய் இருக்கிறது நீங்கள் கத்தோலிக்கராக இருந்துள்ளீர்கள், அப்படித்தானே? பிறகு நீங்கள் கத்தோலிக்க சபையை வேண்டாம் என்று வந்து விட்டீர்கள். அது சரி. அதன் பிறகு, நீங்கள் பெந்தெகோஸ்தே சபைக்கு போக தொடங்கினீர்கள். ஆனால், அந்த சபையை நீங்கள் சேரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக, அந்த சபைக்கு போகாமல் இருந்திருக்கிறீர்கள். என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் கர்த்தரை சேவிக்கும்படிக்கே இந்த பிரச்சனை உங்கள் குழந்தையின் மீது வந்திருக்கிறது. இப்பொழுது, போய், அவருடைய ஆவியினால் மறுபடியும் பிறவுங்கள். நான் அந்த குழந்தையை ஆசிர்வதிப்பேன். ஒரு நிமிடம். ஜெபமாலை வைத்துள்ள ஒருவரை நான் பார்க்கிறேன். அது சில ஸ்திரீகள் நின்று கொண்டிருக்கின்றனர். (Stand by) அதுதான். ஒரு வாலிப ஸ்திரி அங்கே உட்கார்ந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த வாலிப ஸ்திரிக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பது, அது அவளுடைய பாட்டி அவள் வயிற்று வலியினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறாள். அது சரி. அப்படித்தானே? நீங்களோ உங்கள் தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள். அது சரி இல்லையா? நீங்கள் இருவரும் கத்தோலிக்கர்கள். கர்த்தராகிய இயேசு உங்களை இரட்சித்து, இப்பொழுதே உங்களை சுகமாக்குவார் என்றும், நீங்கள் சுகமாவீர்கள் என்றும் விசுவாசிக்கிறீர்களா? அதை விசுவாசிப்பீர்களா? நீங்கள் விரும்பினால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எல்லாம் சரி. இப்பொழுது, அங்கிருக்கிற உங்கள் பாட்டியின் மீது உங்கள் கரங்களை வையுங்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின பிதாவாகிய தேவனே விசுவாசிக்கிறவர்களுக்கு யாவும் கை கூடும். எல்லா பாவத்தையும் மன்னியும் என்று, கர்த்தாவே, நான் ஜெபிக்கிறேன். இங்கிருக்கிற இந்த அன்பான குழந்தையை நீர் சுகமாக்கும். அதன் மீது உள்ள சாபத்தை நான் எடுத்துப் போடுகிறேன். அது விசுவாசிப்பதற்கு மிக சிறு பிள்ளையாய் இருக்கிறது. இந்த பிள்ளை தொடர்ந்து ஜீவிப்பாளாக. சாத்தான் அந்த குழந்தையினுடைய வாழ்நாட்களை எண்ணி முடித்து விட்டான் ஆனால், அந்த தாயோ இப்பொழுது கர்த்தராகிய இயேசுவாகிய உம்மிடத்திற்கு வந்திருக்கிறாள். இந்த வியாதி அந்த குழந்தையினுடைய ஜீவனை எடுக்காத படிக்கும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த குழந்தையை காப்பாற்றும் படிக்கும் நான் அந்த வியாதியை சபித்து போடுகிறேன். அந்த குழந்தையை பிடித்திருக்கிறவர்களையும் நீர் ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். இப்பொழுது, அது முற்றிலும் முடிந்தது, சகோதரியே. உங்களிடத்தில் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் இப்பொழுது உணர்வது போல வேறெப்பொழுதும் உணர்ந்ததில்லை. அது சரி இல்லையா? மேலும், நீங்களும் கூட எல்லா பாவத்திலிருந்தும் மன்னிக்கப்பட்டீர்கள். உங்களுடைய குழந்தை தொடர்ந்து ஜீவிப்பாள். பயப்படாதிருங்கள். உங்களுடைய பாதையில் தொடர்ந்து செல்லுங்கள். உங்களுடைய அம்மா அல்லது உங்களுடைய பாட்டியிடம் போய் அவளுக்கு என்ன விருப்பமோ அதை சாப்பிட சொல்லுங்கள். உங்களுடைய தலைவலி நின்று போகிறது, சகோதரியே. இந்த ஸ்திரியிடைய பிரச்சனை, அது எல்லாம் முடிந்தது. இப்பொழுது, விசுவாசிக்க மாத்திரம் செய்து, உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். அல்லேலூயா. அந்த ஸ்திரி, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த அந்த ஸ்திரிக்கு மார்பக பிரச்சினை உள்ளது. அப்படித்தானே, சகோதரியே? தேவன் நம்மோடு பேசி இருந்ததின் நிமித்தம், தன் தலையை குனிந்து அவள் அழுது கொண்டு, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். உங்களுடைய ஜெபங்களையும் அவர் கேட்டுவிட்டார், சகோதரியே. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்களும் சுகமாக்கப்பட்டீர்கள். உங்களுடைய விசுவாசம் உங்களை இரட்சித்தது. ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த மக்களில் சிலரை இங்கு கூட்டி வாருங்கள். அவர்கள் விசுவாசத்தை கொண்டிருக்கின்றனர். பெந்தெகோஸ்தே மக்களாகிய உங்களுக்கு என்ன ஆனது? கத்தோலிக்க மக்கள் விசுவாசத்தோடு வருகின்றதை பாருங்கள். கத்தோலிக்க மக்களுக்கு அவர்களுடைய பாதிரியார் என்ன சொன்னாரோ அதுதான் சரி என்றதாய் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கின்றனர். யாரோ ஒரு கத்தோலிக்கரை இந்த ஜெப வரிசையில் இங்கு கொண்டு வந்து பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதை நீங்கள் பார்ப்பீர்கள். என்ன சொல்லப்படுகிறதோ அது எல்லாவற்றையும் அந்த நபர் விசுவாசிப்பார். 57. ஸ்பானீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்திரியாயிருக்கிற நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது சரி என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா ? ஸ்திரிகளுக்கு உண்டான அந்த தொல்லை உங்களை விட்டு நீங்கி விட்டது. நீங்கள் சுகமாக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆர்ப்பரித்துக் கொண்டு உங்கள் வழியே போய் இயேசுவின் நாமத்தினாலே சுகமாக்கப்படுங்கள். அல்லேலூயா. இப்பொழுது சகோதரியே, இருதய பிரச்சனையை சுகமாக்கி உன்னை தேவன் சுகமாக்குவார் என்று நீ விசுவாசிப்பாயா? நல்லது, உன் வழியே சந்தோசமாய் ஆர்ப்பரித்துக் கொண்டு போ, அவர் நமக்கு தேவையான ஒவ்வொன்றையும் தருகிற யேகோவாயிரேவாக அவர் இருக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஓ என்னே, விசுவாசத்தை உடையவர்களாக இருப்பதற்கு அதுதான் வழி. இப்பொழுது அது எல்லா இடங்களிலும் அமர தொடங்குகிறது. 58. நான் அந்த சீமாட்டியிடம் பேசும் பொழுது ஏதோ ஒன்று நடந்தது இல்லையா? தேவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டும் ஆர்ப்பரித்துக் கொண்டும் உங்கள் வழியே போய் இயேசுவின் நாமத்தின் மூலமாக நன்றாக இருங்கள். ஒரு துளி கூட சந்தேகிக்க வேண்டாம். உங்கள் முழு உங்கள் முழு இருதயத்தோடும் வெறுமனே விசுவாசியுங்கள். வாருங்கள், ஐயா. இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கட்டும். அந்த வயிற்று தொல்லை போய்விட்டது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆர்ப்பரித்துக் கொண்டு உங்கள் வழியே போங்கள். ஏனென்றால் அவர் உங்களை சுகமாக்கி இருக்கிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எல்லோரும் சொல்லலாம். சகோதரியே நீ விசுவாசிக்கிறாயா? ஹேம்பர்கர் சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் போய் சாப்பிடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே குணமாகி நன்றாய் இருங்கள். அந்த வயிற்று புண் எல்லாம். இந்த மூட்டு வலிகளை வெகு சுலபமாக என்னுடைய தேவன் சுகமாக முடியும். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நல்லது, அவர் உங்களுக்காக என்ன செய்தாரோ அதற்காக தேவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டு போங்கள். நல்லது, பெண்களுக்கு உண்டான தொல்லை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பதட்டமாகவும் மூட்டு வலியை உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். "ஆண்டவரே உமக்கு நன்றி "என்று சொல்லிக் கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டு இந்த மேடையை விட்டு கடந்து போங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று எல்லோரும் சொல்லலாம். (கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சபையார் சொல்லுகிறார்கள்- ஆசிரியர்) நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது பெற்றுக் கொள்ளும்படி திரும்புங்கள். "உன்னால் விசுவாசிக்க கூடுமானால்." 59. உங்கள் ஒவ்வொருவரையும் இப்பொழுது சுகமாக்குவதற்கு பரிசுத்த ஆவியானவர் விரும்புகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதைக் அதைக் குறித்து என்ன, பெண்ணே? சகோதரனே சகோதரியே அதை குறித்து என்ன? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? என்னுடைய சரீரத்தில் பெலனும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியக்கூடிய சுய நினைவும் எனக்கு இருக்கையில் இப்பொழுது அதை விசுவாசிப்பதற்கு விரும்புகிறீர்களா? நாம் ஜெபிக்கலாம். பரலோக பிதாவே, ஜனங்களை கட்டி இருக்கிற ஒவ்வொரு பிசாசையும் நீர் கண்டிக்க வேண்டும் என்றும் இந்த இரவை ஒரு மகத்தான வெற்றியின் இரவாக மாற்றும் என்றும் இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். உம்முடைய ஆவியானவர் ஜனங்கள் மீது அசைவாடிக் கொண்டிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது ஒவ்வொரு விசுவாசியையும் ஞானஸ்நானம் பண்ண வேண்டும் என்றும் அவர்கள் ஆபிரஹாமின் வித்து என்றும் வாக்குத்தத்தத்தின் சுதந்திரவாளிகள் என்றும் அவர்கள் அறியும்படி செய்வாராக. சுசுகமாக்குதலின் வாக்குத்தத்தம் அவர்களுடையது. நான் இப்பொழுது பிசாசை கண்டிக்கிறேன். இந்த பழைய சந்தேகப்படுகிற பிசாசு ஜனங்களை எப்படியாக கட்டி வைக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனுக்கு எந்த ஒரு அதிகாரம் கிடையாது. பிசாசே! சாத்தானே, உன்னிடத்தில் இருந்து எல்லா வல்லமையும் உன்னிடத்தில் இருந்து எல்லா பாவத்தின் வல்லமையும் கல்வாரியில் தேவகுமாரனுடைய இரத்தம் அவருடைய சரீரத்தின் பக்கங்களிருந்து வெளியே வந்த போது இயேசு கிறிஸ்து உன்னிடத்திலிருந்து உரித்து எடுத்து விட்டார். அவருடைய சரீரத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் வெளியே எடுக்கப்பட்டு உன்னை வெளிப்படுத்தி காட்டும்படி சபைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். 2000 வருடங்களுக்கு பின்பு வெளியேரங்கமாக்கப்பட்டவனாய் நீ இங்கே இருக்கிறாய். நீ ஒரு தோல்வி அடைந்தவன். ஜீவிக்கின்ற தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினாலே நீ ஜனங்களை விட்டு வெளியேறும்படி உனக்கு கட்டளையிடுகிறேன். Z